இரண்டாவது அத்தியாயம் (ஸாங்க்ய யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
தேஹிநோ அஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா। ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி॥ 2.13 ॥ |
இந்த உடம்பு எப்படி இளமையும் வாலிபமும் மூப்பும் அடைகிறதோ அப்படியே அதில் உறைகின்ற ஆன்மா வேறு உடலையும் பெறுகிறது.அறிவாளிகள் அதை கண்டு குழம்புவதில்லை.
மாத்ராஸ்பர்ஷாஸ்து கௌந்தேய
ஷீதோஷ்ணஸுகது:கதா:। ஆகமாபாயிநோ அநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத॥ 2.14 ॥ |
குந்தியின் மகனே ! புலன்களுக்கும் பொருட்களுக்கும் உள்ள தொடர்பு குளிர்-சூடு, சுகம்-துக்கம் ஆகியவற்றை தருவனவாகவே இருக்கும். ஆனால் அவை தோன்றி மறைபவை, நிலையற்றவை. அர்ஜுனா ! அவற்றை பொருத்துக்கொள்.
யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப। ஸமது:கஸுகம் தீரம் ஸோ அம்ருதத்வாய கல்பதே॥ 2.15 ॥ |
ஆண் சிறந்தவனே ! இவை ( சுகம்-துக்கம் போன்ற இரட்டைகள் ) யாரை பதற்றத்திற்கு உள்ளக்குவதில்லையோ, யார் சுக துக்கங்களை சமமாக கொள்பவனோ, யார் விவேகியோ அவன் நிச்சயமாக மரணமில்லா பெருநிலைக்கு தகுதி வாய்ந்தவன் ஆகிறான்.
நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத:। உபயோரபி த்ருஷ்டோ அந்தஸ்த்வநயோஸ்தத்த்வதர்ஷிபி:॥ 2.16 ॥ |
உண்மையற்றது இருக்காது. உண்மையானது இல்லாமல் போகாது இந்த கருத்தை மகான்கள் உணர்ந்து இருகிறார்கள்.
அவிநாஷி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம்। விநாஷமவ்யயஸ்யாஸ்ய ந கஷ்சித்கர்துமர்ஹதி॥ 2.17 ॥ |
எதனால் இந்த உலகம் அனைத்தும் வியாப்பிக்கபட்டுள்ளதோ அது அழிவற்றது.என்பதை அறிந்துகொள். மாறாக அந்த ஒன்றை யாராலும் அழிக்க முடியாது.
அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஷரீரிண:। அநாஷிநோ அப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத॥ 2.18 ॥ |
உடம்பில் உள்ள ஆன்மா என்றென்றும் இருப்பது, அழிவற்றது, அறியமுடியாதது ஆனால் உடம்புகள் முடிவு உடையது என்று சொல்லபடுகிறது. எனவே அர்ஜுனா போர் செய்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாவது அத்தியாயம் (ஸாங்க்ய யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, ஸ்ரீமத், இரண்டாவது, ஸாங்க்ய, அத்தியாயம், யோகம், துக்கம், யார், அர்ஜுனா, வித்யதே, அழிவற்றது, சுகம், இந்து, bhagavad, gita, ஆன்மா, பாரத&, உள்ள