இரண்டாவது அத்தியாயம் (ஸாங்க்ய யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை

கார்பண்யதோஷோபஹதஸ்வபாவ: ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா:। யச்ச்ரேய: ஸ்யாந்நிஷ்சிதம் ப்ரூஹி தந்மே ஷிஷ்யஸ்தே அஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபந்நம்॥ 2.7 ॥ |
சிறுமை என்ற கேட்டினால் நிலை தடுமாறி உள்ளேன். எது தர்மம் என்பதை அறியாமல் குழம்பி நிற்கிறேன். எனக்கு எது நிச்சயமான நன்மை தருமோ அதை சொல்வாய். நான் உனது சீடன், உன்னை சரணடைகிறேன். எனக்கு அறிவுரை சொல்வாய்.
ந ஹி ப்ரபஷ்யாமி மமாபநுத்யாத் யச்சோகமுச்சோஷணமிந்த்ரியாணாம்। அவாப்ய பூமாவஸபத்நம்ருத்தம் ராஜ்யம் ஸுராணாமபி சாதிபத்யம்॥ 2.8 ॥ |
எதிரிகள் இல்லாததும் வளமானதுமான அரசை பெற்றாலும் தேவர்களின் தலைமை பதவியே எனக்கு கிடைத்தாலும் புலன்களை வாட்டுகின்ற எனது கவலையை அது போக்குமென்று தோணவில்லை.
ஸம்ஜய உவாச। |
ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஷம் குடாகேஷ: பரம்தப:। ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ॥ 2.9 ॥ |
சஞ்ஜயன் கூறினார்: இவ்வாறு கூறிய பிறகு எதிரிகளை எரிப்பவனும் தூக்கத்தை வென்றவனுமாகிய அர்ஜுனன் புலன்களை வென்றவராகிய ஸ்ரீ கிருஷ்ணரிடம் நான் போரிட மாட்டேன் என்று சொல்லிவிட்டு மெளனமாக இருந்துவிட்டான்.
தமுவாச ஹ்ருஷீகேஷ: ப்ரஹஸந்நிவ பாரத। ஸேநயோருபயோர்மத்யே விஷீதந்தமிதம் வச:॥ 2.10 ॥ |
மன்னா ! இரண்டு படைகளுக்கும் இடையில் தவித்து கொண்டு இருந்த அர்ஜுனனிடம் ஸ்ரீ கிருஷ்ணர் சற்றே சிரிப்பவர் போல் கூறலானார்.
ஸ்ரீபகவாநுவாச। |
அஷோச்யாநந்வஷோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதாம்ஷ்ச பாஷஸே। கதாஸூநகதாஸூம்ஷ்ச நாநுஷோசந்தி பண்டிதா:॥ 2.11 ॥ |
ஸ்ரீ பகவான் கூறினார்: நீ துக்கப்பட கூடாதவர்களுக்காக துக்கபடுகிறாய். அதே வேளையில் பண்டிதர்களை போல் பேசவும் செய்கிறாய். இறந்தவர்களை பற்றியோ இருப்பவர்களை பற்றியோ அறிவாளிகள் கவலைபடுவதில்லை.
நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே
ஜநாதிபா:। ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்॥ 2.12 ॥ |
நான் ஒரு போதும் இல்லாமல் இல்லை. நீயும் இந்த மன்னர்களும் கூட இல்லாமல் இருந்ததில்லை. நாம் யாரும் இனி இல்லாமல் போய்விடுவோம் என்பதும் இல்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாவது அத்தியாயம் (ஸாங்க்ய யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, இரண்டாவது, எனக்கு, நான், ஸ்ரீ, அத்தியாயம், ஸ்ரீமத், யோகம், இல்லாமல், ஸாங்க்ய, போல், இல்லை, பற்றியோ, கூறினார், த்வாம், bhagavad, gita, இந்து, சொல்வாய், புலன்களை