இரண்டாவது அத்தியாயம் (ஸாங்க்ய யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத த்விதீயோ அத்யாய:। ஸாங்க்யயோகம்(உண்மையறிவை துனைகொள்) |
ஸம்ஜய உவாச। |
தம் ததா க்ருபயாவிஷ்டமஷ்ருபூர்ணாகுலேக்ஷணம்। விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதந:॥ 2.1 ॥ |
சஞ்ஜயன் கூறினார்: இரக்கத்தால் நெகிழ்ந்து, கண்ணீர் நிறைந்ததால் பார்வை மறைந்து, சோகத்தில் மூழ்கியிருந்த அர்ஜுனனிடம் கிருஷ்ணர் இவ்வாறு சொல்ல தொடங்கினார்.
ஸ்ரீபகவாநுவாச। |
குதஸ்த்வா கஷ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்। அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுந॥ 2.2 ॥ |
முழுமுதற் கடவுள் (பகவான்) கூறினார்: அர்ஜுனா ! மேன்மக்களுக்கு போருந்தாததும், சொர்க்க பேற்றை தடுப்பதும், இகழ்ச்சிக்குரியதுமான மனசோர்வு இக்கட்டான இந்த நிலையில் எங்கிருந்து உன்னை வந்தடைந்தது ?
க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த
நைதத்த்வய்யுபபத்யதே। க்ஷுத்ரம் ஹ்ருதயதௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரம்தப॥ 2.3 ॥ |
அர்ஜுனா ! பேடி தனத்திற்கு இடம் தராதே. இது உன்னக்கு பொருந்தாது. எதிரியை வாட்டுபவனே ! அற்பமான இந்த மன தளர்ச்சியை விட்டுவிட்டு எழுந்திரு.
அர்ஜுன உவாச। |
கதம் பீஷ்மமஹம் ஸாங்க்யே த்ரோணம் ச மதுஸூதந। இஷுபி: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூதந॥ 2.4 ॥ |
அர்ஜுனன் கூறினான்: எதிரிகளை கொள்பவனே ! மது என்ற அரக்கனை கொன்றவனே ! வழிப்படதக்கவர்களான பீஷ்மரையும் துரோனரையும் எதிர்த்து நான் எப்படி பாணங்களை விடுவேன்.
குரூநஹத்வா ஹி மஹாநுபாவாந் ஷ்ரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே। ஹத்வார்தகாமாம்ஸ்து குருநிஹைவ புஞ்ஜீய போகாந் ருதிரப்ரதிக்தாந்॥ 2.5 ॥ |
மேன்மை பொருந்திய ஆச்சாரியர்களை கொள்வதை விட பிச்சையேற்று வாழ்வது கூட நிச்சயமாக நல்லது.இந்த ஆச்சாரியர்கள் ஆசை வசபட்டவர்களாக இருந்தாலும் இவர்களை கொன்று இவர்களது ரத்தத்தில் தோய்ந்த சுகபோகங்களை இவர்களது இடத்திலேயே இருந்து கொண்டு எப்படி அனுபவிப்பது ?
ந சைதத்வித்ம: கதரந்நோ கரீயோ யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு:। யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாம: தே அவஸ்திதா: ப்ரமுகே தார்தராஷ்ட்ரா:॥ 2.6 ॥ |
யாரை கொன்றபின் நாம் உயிர்வாழ விரும்ப மாட்டோமோ அந்த கௌரவர்கள் நம் முன்னால் நிற்கின்றனர். நாம் இவர்களை வெல்வது, இவர்கள் நம்மை வெல்வது இதில் எது நமக்கு சிறந்தது என்பது தெரியவில்லையே !
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாவது அத்தியாயம் (ஸாங்க்ய யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, ஸ்ரீமத், இரண்டாவது, யோகம், அத்தியாயம், ஸாங்க்ய, இவர்களது, இவர்களை, நாம், வெல்வது, எப்படி, இந்து, bhagavad, gita, உவாச&, கூறினார், அர்ஜுனா