முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.121.திருவிடைமருதூர் - திருவிராகம்
1.121.திருவிடைமருதூர் - திருவிராகம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசர்.
தேவியார் - நலமுலைநாயகியம்மை.
1304 |
நடைமரு திரிபுர படைமரு தழலெழ புடைமரு திளமுகில் இடைமரு தடையநம் |
1.121.1 |
இயங்குதலைப் பொருந்திய திரிபுரங்களை எரியுண்ணுமாறு சிரித்தருளித் தனது படைக்கலத்தால் தீ எழும்படி செய்தருளிய வெற்றி மழுவேந்திய பகவனாகிய சிவபிரான் எழுந்தருளியதும் அருகில் வளர்ந்துள்ள மருத மரங்களில் இளமேகங்கள் தவழ்ந்து மழை வளத்தை நிரம்பத் தருவதுமான திருஇடைமருதூரை அடைந்தால் நம் இடர்கெடல் எளிதாகும்.
1305 |
மழைநுழை மதியமொ கழைநுழை புனல்பெய்த குழைநுழை திகழ்செவி இழைநுழை புரியண |
1.121.2 |
மேகங்களிடையே நுழைந்து செல்லும் பிறை மதியோடு தசை வற்றிய தலையோடு ஆகியவற்றையும், மடமயில்கள் மூங்கிலிடையே நுழைந்து செல்லும் மலையில் தோன்றிய தேவ கங்கை நதியையும்; கமழுமாறு சடைமுடியில் சூடியவனும், குழை நுழைந்து விளங்கும் செவியழகோடு இழையாகத் திரண்ட முப்புரிநூலை விரும்பி அணிபவனுமாகிய அண்ணல் எழுந்தருளிய இடம் திரு விடைமருதூராகும்.
1306 |
அருமைய னௌமைய கருமையி னொளிபெறு பெருமையன் சிறுமையன் இருமையு முடையண |
1.121.3 |
அன்பில்லாதவர்க்கு அரியவனும், அன்புடை அடியவர்க்கு எளியவனும், அழலும் தன்மையுடைய விடத்தை உண்டு நிறுத்திய கண்டத்தினனும், பெரியனவற்றுக்கெல்லாம் பெரியவனும், சிறியன யாவற்றினும் சிறியவனும், தன்னோடு பிணைந்துள்ள உமையம்மையோடு ஓருருவில் இருவடிவாய்த் தோன்றுபவனுமாகிய சிவபிரானுக்குரிய இடம் திருவிடைமருதூர் ஆகும்.
1307 |
பொரிபடு முதுகுற நரிவளர் சுடலையு வரிவளர் குளிர்மதி எரிவளர் சடையண |
1.121.4 |
நன்கு காய்ந்து பொரிந்த முதுகினை உடைய நரிகள் களிப்போடு அருகில் மிகுந்து தோன்ற, சுடலைக் காட்டில் நடம் நவில்பவனும், கோடாகத் தோன்றிப் பின்வளரும் குளிர்ந்த பிறைமதியை ஒளிபெற அணிந்த எரிபோன்று வளரும் சடைமுடியை உடையவனும் ஆகிய தலைமையாளனாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும்.
1308 |
வருநல மயிலன பெருநல முலையிணை செருநல மதிலெய்த இருநல புகழ்மல்கு |
1.121.5 |
அழகோடு அசைந்து வரும் மயில் போன்ற மடநடையினளாகிய மலையரையன் மகளும், பெரு நல முலையாள் என்ற திருப்பெயருடையவளுமாகிய அம்மையின் இருதன பாரங்களைக் கூடியவனும், போர் செய்தற்குரிய தகுதியோடு விளங்கிய அவுணர்களின் மும்மதில்களை எய்தழித்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் இடமாகிய செழுமையான நகர் விரிந்த புகழால் நிறைந்த திருஇடைமருதூர் ஆகும்.
1309 |
கலையுடை விரிதுகில் மலையுடை மடமகள் விலையுடை யணிகல டிலையுடை படையவ |
1.121.6 |
மேகலை சூழ்ந்த விரிந்த ஆடையுடன் அகிற் புகையின் மணம் கமழும் கூந்தலை உடைய மலையரையனின் மடமகளாகிய பார்வதி தேவியை இடப்பாகமாக உடையவனும் விலை மதிப்புடைய அணிகலன்கள் எவையும் இல்லாதவன் என்னுமாறு என்பு முதலியன பூண்டு மழு இலைவடிவான சூலம் இவற்றைப் படைக்கலனாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும்.
1310 |
வளமென வளர்வன இளமண லணைகரை துளமென நினைபவ குளமண லுறமூழ்கி |
1.121.7 |
இது வளமான இடமாகும் என வளர்வனவாகிய வரிப் பாடல்களைப் பாடும் வண்டுகள் இளமணல் அணைந்த கரையில் தங்கி முரலும் இடைமருதை மனமார நினைபவர் அந்நகரை அடைந்து ஆங்குள்ள தீர்த்தத்தில் நன்கு மூழ்கி ஒலிக்கின்ற கழலணிந்த மருத வாணனை வழிபடுதலைப் பண்பாகக் கொள்க.
1311 |
மறையவ னுலகவன் துறையவ னெனவல கறையவன் மிடறது இறையவ னுறைதரு |
1.121.8 |
வேதங்களை அருளியவனும் அனைத்துலகங்களாய் விளங்குபவனும், திங்களாகத் திகழ்பவனும், அறிவொடுபட்ட கலைத் துறைகளாக விளங்குபவனும் சிவபிரானேயாவன் என்று போற்ற வல்ல அடியவர் துயரிலராவர். மிடற்றிற் கறையுடையவனும் கனல்போல் விளங்கும் சடையினனும் எல்லோர்க்கும் தலைவனும் ஆய அப்பெருமான் உறையும் இடம் இடைமருதாகும்.
1312 |
மருதிடை நடவிய இருதுடை யகலமொ கருதிட லரியதொ எருதுடை யடிகள்தம் |
1.121.9 |
மருதமரங்களின் இடையே கட்டிய உரலோடு தவழ்ந்த நீலமணிபோன்ற நிறத்தை உடைய திருமாலும், பிரமனும் மிக்க பெருமையுடையவர் யார் எனத் தம்முள் மாறுபட்டவராய் நிற்க அவர்கள் இன்னதெனக் கருதற்கரிய பெரிய ஒளி உருவோடு தோன்றிய பெரிய விடையூர்தியனாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும்.
1313 |
துவருறு விரிதுகி அவருறு சிறுசொலை கவருறு புனலிடை அவருறு வினைகெட |
1.121.10 |
துவர் ஏற்றிய விரிந்த ஆடையினை உடுத்தும் போர்த்தும் திரியும் புத்தரும் சமணரும் கூறும் சிறு சொல்லை விரும்பாதீர். காவிரி பல கிளைகளாகப் பிரிந்து செல்லும் வாய்க்கால்களை உடைய இடைமருதைக் கைகளால் தொழுபவர்க்கு வினைகள் கெடுதலும் நல்ல குணங்கள் உண்டாதலும் கூடும்.
1314 |
தடமலி புகலியர் இடமலி பொழிலிடை படமலி தமிழிவை கெடமலி புகழொடு |
1.121.11 |
நீர்நிலைகள் பலவற்றை உடைய புகலிப் பதியில் தோன்றியவனும், தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் விரிந்த பொழில்களால் சூழப்பட்ட இடைமருதீசனை இசையால் பரவிய சொல்லோவியமாகிய இத்திருப்பதிகத் தமிழைப் பாடிப் பரவ வல்லவர்தம் வினைகள் கெட்டொழிய அவர்கள் புகழோடும் விளங்கும் ஒளியோடும் திகழ்பவராவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.121.திருவிடைமருதூர் - திருவிராகம் , மருதே, இடம், உடைய, விரிந்த, இடைமருதாகும், திருவிடைமருதூர், செல்லும், லிடமிடை, திருமுறை, விளங்கும், திருவிராகம், நுழைந்து, சிவபிரானது, கமழ்சடை, உறையும், அவருறு, வினைகள், பெரிய, விளங்குபவனும், ஆகிய, குணமே, மிடமிடை, தோன்றிய, சிவபிரான், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், அருகில், மருத, நன்கு, ஆகும், மிளிர்வதொர், முடியன், உடையவனும்