பதினாறாவது அத்தியாயம் (தைவாஸுரஸம்பத்விபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
|
இதமத்ய மயா லப்தமிமம் ப்ராப்ஸ்யே மநோரதம்। இதமஸ்தீதமபி மே பவிஷ்யதி புநர்தநம்॥ 16.13 ॥ |
இது, இன்று என்னால் அடையப்பட்டது, இந்த ஆசை இனி நிறைவேறப் பெரும். இது எனக்கு உள்ளது. இந்த செல்வமும் வந்து சேரும் என்றெல்லாம் அசுர இயல்பினர் மனகோட்டை கட்டுகின்றனர்.
|
அஸௌ மயா ஹத: ஷத்ருர்ஹநிஷ்யே சாபராநபி। ஈஷ்வரோ அஹமஹம் போகீ ஸித்தோ அஹம் பலவாந்ஸுகீ॥ 16.14 ॥ |
என்னால் இந்த எதிரி கொல்லப்பட்டான், மற்றவர்களையும் கொல்வேன் என்று இறுமாப்பு கொள்கிறார்கள். நானே தலைவன் நான் போகங்களை அனுபவிக்கிறேன். நான் நினைத்தது நிறைவேற பெற்றவன். பலசாலி, சுகமாயிருப்பவன் என்று ஆணவம் கொள்கிறார்கள்.
|
ஆட்யோ அபிஜநவாநஸ்மி கோ அந்யோஸ்தி ஸத்ருஷோ மயா। யக்ஷ்யே தாஸ்யாமி மோதிஷ்ய இத்யஜ்ஞாநவிமோஹிதா:॥ 16.15 ॥ |
அறியாமையில் மதிமயங்கிய அவர்கள், நான் பணக்காரன், உயர்குலத்தவன், எனக்கு சமமானவன் யார் ? நான் யோகம் செய்வேன், தானம் செய்வேன், மகிழ்ச்சியில் மிதப்பேன் என்றெல்லாம் பிதற்றுகிறார்கள்.
|
அநேகசித்தவிப்ராந்தா மோஹஜாலஸமாவ்ருதா:। ப்ரஸக்தா: காமபோகேஷு பதந்தி நரகே அஷுசௌ॥ 16.16 ॥ |
பல்வேறு சிந்தனைகளால் குழப்பம் அடைந்த, மோகவலையில் சிக்கிய, காம போகங்களில் ஆழ்ந்த அவர்கள் பாழ் நகரில் வீழ்கிறார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினாறாவது அத்தியாயம் (தைவாஸுரஸம்பத்விபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, யோகம், நான், பகவத்கீதை, பதினாறாவது, ஸ்ரீமத், அத்தியாயம், தைவாஸுரஸம்பத்விபாக, கொள்கிறார்கள், செய்வேன், என்றெல்லாம், என்னால், bhagavad, இந்து, gita, எனக்கு