பதினாறாவது அத்தியாயம் (தைவாஸுரஸம்பத்விபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
தைவீ ஸம்பத்விமோக்ஷாய நிபந்தாயாஸுரீ மதா। மா ஷுச: ஸம்பதம் தைவீமபிஜாதோ அஸி பாண்டவ॥ 16.5 ॥ |
தெய்வீக இயல்பு மோட்சத்தை தருவது, அசுர இயல்பு பந்தத்தை தருவது என்று கருதபடுகிறது. அர்ஜுனா ! வருந்தாதே. நீ தெய்வீக இயல்புடன் பிறந்திருக்கிறாய்.
த்வௌ பூதஸர்கௌ லோகே அஸ்மிந்தைவ ஆஸுர ஏவ ச। தைவோ விஸ்தரஷ: ப்ரோக்த ஆஸுரம் பார்த மே ஷ்ருணு॥ 16.6 ॥ |
அர்ஜுனா ! தெய்வீக இயல்பினர், அசுர இயல்பினர் என்று இந்த உலகில் இரண்டு வகையினர் உள்ளனர். தெய்வீக இயல்பு பற்றி விரிவாக கூறினேன். இனி அசுர இயல்பு பற்றி கூறுகிறேன் கேள்.
ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ஜநா ந விதுராஸுரா:। ந ஷௌசம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷு வித்யதே॥ 16.7 ॥ |
எதை செய்ய வேண்டும், எதை செய்ய கூடாது என்பது அசுர இயல்பினருக்கு தெரியாது. அவர்களிடம் தூய்மை இல்லை. நல்லொழுக்கம் இல்லை. உண்மையும் இல்லை.
அஸத்யமப்ரதிஷ்டம் தே ஜகதாஹுரநீஷ்வரம்। அபரஸ்பரஸம்பூதம் கிமந்யத்காமஹைதுகம்॥ 16.8 ॥ |
உலகம் அடிப்படை நியதிகள் எதுவுமின்றி இயங்குவது, தர்மத்தில் நிலை பெறாதது. கடவுள் இல்லாதது. ஆண் – பெண் உறவினால் தோன்றியது. காமத்தை காரணமாக கொண்டது என்பதை தவிர வேறு என்ன ? என்று அசுர இயல்பினர் சொல்கின்றனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினாறாவது அத்தியாயம் (தைவாஸுரஸம்பத்விபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, அசுர, இயல்பு, தெய்வீக, பகவத்கீதை, யோகம், தைவாஸுரஸம்பத்விபாக, அத்தியாயம், இல்லை, பதினாறாவது, ஸ்ரீமத், இயல்பினர், செய்ய, பற்றி, இந்து, bhagavad, gita, தருவது, அர்ஜுனா