குறுந்தொகை - 229. பாலை - கண்டோர் கூற்று
(தலைவனும் தலைவியும் பாலை நிலத்தில் உடன் போன வழிஅவரைக் கண்டார், “இவர்கள் இளமையில் ஒருவரோடு ஒருவர் கலாம்விளைத்திருந்தனர். இப்பொழுதோ இணை பிரியாத துணைவர் ஆயினர்.ஊழின் வலிதான் என்னே!” எனத் தம்முள் கூறியது.)
| இவனிவ ளைம்பால் பற்றவும் இவளிவன் புன்றலை யோரி வாங்குநள் பரியவும் காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிரா தேதில் சிறுசெரு வுறுப மன்னோ நல்லைமன் றம்ம பாலே மெல்லியல் |
5 |
| துணைமலர்ப் பிணைய லன்னவிவர் மணமகிழ் இயற்கை காட்டி யோயே. |
|
| - மோதாசானார். |
இவன்இவளது கூந்தலைப் பிடித்து இழுக்கவும் இவள் இவனதுபுல்லிய தலை மயிரை வளைத்து இழுப்பாளாய் ஓடவும் அன்புடைய செவிலித்தாயார் இடைமறித்துத் தடுக்கவும் ஒழியாமல் அயன்மையை உடைய சிறியசண்டையை முன்பு பொருந்துவார்கள்; இப்பொழுது மலரைப் பிணைத்தஇரட்டை மாலையைப் போன்ற இவர்கள் மணம் புரிந்து மகிழும் இயல்பைஉண்டாக்கினாய்; ஆதலின் ஊழ்வினையே நீ நிச்சயமாக நன்மையை யுடையாய்.
முடிபு: செரு உறுப; பாலே, மணமகிழியற்கை காட்டியோய்;நல்லை மன்ற.
கருத்து: ஊழ்வினையின் வலியால் இவர்கள் தலைவனும்தலைவியும் ஆயினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 229. பாலை - கண்டோர் கூற்று, இலக்கியங்கள், பாலை, குறுந்தொகை, கண்டோர், கூற்று, பாலே, இவர்கள், எட்டுத்தொகை, சங்க, ஆயினர்