மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.099.திருமுதுகுன்றம்

3.099.திருமுதுகுன்றம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது - இதுவே விருத்தாசலம்.
சுவாமிபெயர் - பழமலைநாதர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
| 3864 | முரசதிர்ந்
தெழுதரு முதுகுன்ற மேவிய பரசமர் படையுடை யீரே பரசமர் படையுடை யீருமைப் பரவுவார் அரசர்க ளுலகிலா வாரே |
3.099.1 |
பூசை, திருவிழா முதலிய காலங்களில் முரசு அதிர்ந்து பேரோசை ஏழுப்புகின்ற திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற மழுப்படையை உடைய சிவபெருமானே! மழுப்படையையுடைய உம்மைப் போற்றி வணங்குபவர்கள் உலகினில் அரசர்கள் ஆவர் .
| 3865 | மொய்குழ
லாளொட முதுகுன்ற மேவிய பையர வம்மசைத் தீரே பையர வம்மசைத் தீருமைப் பாடுவார் நைவிலர் நாடொறு நலமே |
3.099.2 |
அடர்ந்த கூந்தலையுடைய உமாதேவியோடு திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, பாம்பைக் கச்சாக அரையில் கட்டியுள்ள சிவபெருமானே! பாம்பைக் காச்சாகக் கட்டியுள்ள உம்மை பாடுவார் எவ்விதக் குறையும் இல்லாதவர். நாள்தோறும் நன்மைகளையே மிகப்பெறுவர்.
| 3866 | முழவமம்
பொழிலணி முதுகுன்ற மேவிய மழவிடை யதுவுடை யீரே மழவிடை யதுவுடை யீருமை வாழ்த்துவார் பழியொடு பகையிலர் தாமே |
3.099.3 |
முழவுகள் ஒலிக்கின்றதும், சோலைகளால் அழகு பெற்றதுமான திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, இளமைவாய்ந்த இடபத்தை, வாகனமாகவும் கொடியாகவும் உடைய சிவபெருமானே! இளமைவாய்ந்த இடபத்தை வாகனமாகவும், கொடியாகவும் கொண்ட உம்மை வாழ்த்துபவர்கள் பழியும், பாவமும் இல்லாதவர்கள் ஆவர்.
| 3867 | முருகமர்
பொழிலணி முதுகுன்ற மேவிய உருவமர் சடைமுடி யீரே உருவமர் சடைமுடி யீருமை யோதுவார் திருவொடு தேசினர் தாமே |
3.099.4 |
வாசனை பொருந்திய சோலைகள் அழகு செய்கின்ற திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, அழகு பொருந்திய சடைமுடியினையுடையவரே! அழகு பொருந்திய சடைமுடியினை உடையவராகிய உம்மைப் போற்றி வணங்குபவர்கள் செல்வமும், புகழும் உடையவர்.
| 3868 | முத்தி
தருமுயர் முதுகுன்ற மேவிய பத்து முடியடர்த் தீரே பத்து முடியடர்த் தீருமைப் பாடுவார் சித்தநல் வவ்வடி யாரே |
3.099.8 |
முத்தியைத் தருகின்ற உயர்ந்த திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும், இராவணனின் பத்துத் தலைகளையும் அடர்த்தவருமான சிவபெருமானே! இராவணனின் பத்துத் தலைகளையும் அடர்த்த உம்மைப் பாடுவார் அழகிய சித்தமுள்ள அடியவர்களாவார்கள்.
| 3869 | முயன்றவ
ரருள்பெறு முதுகுன்ற மேவியன் றியன்றவ ரறிவரி யீரே இயன்றவ ரறிவரி யீருமை யேத்துவார் பயன்றலை நிற்பவர் தாமே |
3.099.9 |
தவநெறியில் முயல்பவர்கள் அருள்பெறுகின்ற திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, அன்று தம் செருக்கால் காணத் தொடங்கிய பிரமன், திருமால் இவர்களால் காண்பதற்கு அரியவராக விளங்கிய சிவபெருமானே! பிரமனும், திருமாலும் அறியவொண்ணாதவராகிய உம்மைப் போற்றி வழிபடுவர்கள் சிறந்த பயனாகிய முத்தியைத் தலைக்கூடுவர்.
| 3870 | மொட்டலர்
பொழிலணி முதுகுன்ற மேவிய கட்டமண் டேரைக்காய்ந் தீரே கட்டமண் டேரைக்காய்ந் தீருமைக் கருதுவார் சிட்டர்கள் சீர்பெறு வாரே |
3.099.10 |
மொட்டுக்கள் மலர்கின்ற சோலைகளையுடைய அழகிய திருமுதுகுன்றத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, கட்டுப்பாட்டினையுடைய சமணர்களையும், புத்தர்களையும் கோபித்தவரான சிவபெருமானே! சமணர்களையும், புத்தர்களையும் கோபித்த உம்மைத் தியானிப்பவர்கள் சிறந்த அடியார்கள் பெறுதற்குரிய முத்திப்பேற்றினைப் பெறுவர்.
| 3871 | மூடிய
சோலைசூழ் முதுகுன்றத் தீசனை நாடிய ஞானசம் பந்தன் நாடிய ஞானசம் பந்தன செந்தமிழ் பாடிய அவர்பழி யிலரே |
3.099.11 |
அடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானைத் திருஞானசம்பந்தர் போற்றி அருளினார். அவ்வாறு திருஞானசம்பந்தர் போற்றியருளிய இச்செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடுபவர்கள் பழியிலர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.099.திருமுதுகுன்றம் , திருமுதுகுன்றம், விரும்பி, திருத்தலத்தில், முதுகுன்ற, என்னும், வீற்றிருந்தருளுகின்ற, மேவிய, சிவபெருமானே, அழகு, பாடுவார், உம்மைப், போற்றி, யீரே, ஆவர், பொழிலணி, திருமுறை, தாமே, தீரே, யீருமை, பொருந்திய, சடைமுடி, முடியடர்த், உருவமர், பத்து, சோலைகள், திருஞானசம்பந்தர், முத்தியைத், பத்துத், புத்தர்களையும், நாடிய, சிறந்த, சமணர்களையும், டேரைக்காய்ந், கொடியாகவும், ரறிவரி, ஞானசம், கட்டமண், தலைகளையும், அழகிய, இராவணனின், உம்மை, படையுடை, வாரே, உடைய, வணங்குபவர்கள், பரசமர், திருச்சிற்றம்பலம், மூன்றாம், தேவாரப், பதிகங்கள், பையர, வம்மசைத், யதுவுடை, இளமைவாய்ந்த, இடபத்தை, மழவிடை, கட்டியுள்ள, தீருமைப், அடர்ந்த, பாம்பைக், வாகனமாகவும்