மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.110.திருப்பிரமபுரம்

3.110.திருப்பிரமபுரம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
| 3978 | வரமதேகொளா
வுரமதேசெயும் தரனனாமமே பரவுவார்கள்சீர் |
3.110.1 |
தவம் செய்து பெற்ற வரத்தை நன்முறையில் பயன்படுத்தாது, தமது வலிமையைப் பயன்படுத்தித் தீமை செய்த அசுரர்களின் முப்புரங்களை எரித்தவர் சிவபெருமான். திருப் பிரமபுரம் என்னும் நன்னகரில் வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானின் புகழைப் போற்றி வணங்கும் அடியார்களின் பெருமை இவ்வகன்ற பூமி முழுவதும் பரவும்.
| 3979 | சேணுலாமதில்
வேணுமண்ணுளோர் தாணுவின்கழல் பேணுகின்றவ |
3.110.2 |
ஆகாயத்தை அளாவிய மதில் விண்உலகத்தவர் இறங்குவதற்கு வைத்த மூங்கில் ஏணி என மண்ணுலகத்தவர் காணும்படி அமைந்த, நறுமணம் கமழும் திருவேணுபுரம் என்னும் நன்னகரில் வீற்றிருந்தருளும் தாணுவாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வழிபடுகிறவர்கள் ஆணிப்பொன் போன்று சிறந்தவர்கள் ஆவர்.
| 3980 | அகலமார்தரைப்
புகலுநான் மறைக் பகல்செய்வோனெதிர்ச் சகலசேகர |
3.110.3 |
விரிந்த இப்பூமியிலுள்ளவர்களால் சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற நான்கு வேதங்களிலும் வல்லவர்கள் வாழ்கின்ற திருப்புகலி என்னும் பெரிய நகரத்தில் வீற்றிருந்தருள்கின்றவரும், சூரியனுக்கு எதிரான கலையோடு கூடிய சந்திரனை முடியில் அணிந்தவருமான சிவபெருமானே அகில உலகத்திற்கும் தலைவர் ஆவார்.
| 3981 | துங்கமாகரி
பங்கமாவடுஞ் அங்கணானடி தங்கையாற்றொழத் |
3.110.4 |
உயர்ந்ததும், பெரியதுமான யானை துன்புறும்படி கொன்று அதன் தோலையுரித்த சிவந்த கைகளையுடையவனும், புகழுடன் விளங்கும் திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அழகிய கண்களை உடையவனுமான சிவபெருமான் திருவடிகளைத் தங்கள் கைகளால் தொழுபவர்களிடம் வினைகள் தங்கா.
| 3982 | காணியொண்பொருட்
கற்றவர்க்கீகை றோணிவண்புரத் தாணியென்பவர் |
3.110.5 |
நிலங்களையும், அறவழியில் ஈட்டிய பொருள்களையும் கற்றவர்கட்குக் கொடையாகக் கொடுப்போர் விரும்பி வாழ்கின்ற திருத்தோணிபுரம் என்னும் நல்ல வளமைமிக்க நகரில் வீற்றிருந்தருளுகின்ற ஆணிப்பொன் போன்று அரிய பொருளாய் விளங்கும் சிவபெருமானைத் துதிப்பவர்கள் தூய சிவஞானம் பெறுவர்.
| 3983 | ஏந்தராவெதிர்
வாய்ந்தநுண்ணிடைப் பூந்தராய்தொழு மாந்தர் மேனிமேற் |
3.110.6 |
படம் விரிக்கும் பாம்பிற்கு ஒப்பான நுண்ணிய இடையை உடையவளாய்ப் பூ அணிந்த குளிர்ந்த கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தைப் தொழும் மக்கள்மேல் பிணி முதலிய துன்பங்கள் உடம்பைப் பற்றி நில்லாமல் விலகிவிடும்.
| 3984 | சுரபுரத்தினைத்
துயர்செய்தாரகன் சிரபுரத்துளா னென்னவல்லவர் |
3.110.7 |
தேவருலகத்தைத் துன்புறுத்திய தாரகாசுரனைக் கொல்லும்படி வெஞ்சினம் கொண்ட காளியை அம்பிகையின் அம்சமாகத் தோற்றுவித்தருளிய திருச்சிரபுரத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி வழிபடுபவர்கள் அட்டமாசித்திகள் அனைத்தும் பெறுவர்.
| 3985 | உறவுமாகியற்
றவர்களுக்குமா புறவமாநகர்க் கிறைவனேயெனத் |
3.110.8 |
வறியவர்கட்கு உறவினராகி அவர்கட்கு மாபெருஞ் செல்வத்தைக் கொடுத்து அருள்செய்கின்ற, இந்த நீண்டபூமியில் மக்கள் புகழுடன் விளங்குகின்ற திருப்புறவம் என்னும் மாநகரில் வீற்றிருந் தருளுகின்ற சிவபெருமானே என்று போற்றி வணங்குபவர்களை வினைகள் துன்பம் செய்யா.
| 3986 | பண்புசேரிலங்
கைக்குநாதனன் சண்பையாதியைத் தொழுமவர்களைச் |
3.110.9 |
பெருமைகள் பலவுடைய இலங்கைக்கு அரசனான இராவணன் முடிகள் பத்தையும் நெரித்த, திருச்சண்பை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற ஆதியாகிய சிவபெருமானைத் தொழுபவர்கள் வினைகள் துன்புறுத்தா. வலியிழந்துபோம்.
| 3987 | ஆழியங்கையிற்
கொண்டமாலய காழிமாநகர்க் கடவுணாமமே |
3.110.10 |
சக்கரப்படையை அழகிய கையில் கொண்ட திருமாலும், பிரமனும் அறிய வொண்ணாதபடி நெருப்புப் பிழம்பு வடிவாய் நின்றவனும், சீகாழி என்னும் மாநகரில் வீற்றிருந்தருளுகின்ற கடவுளுமான சிவபெருமானின் புகழ்களையே கற்றல் நல்ல தவமாகும்.
| 3988 | விச்சையொன்றிலாச்
சமணர்சாக்கியப் கொச்சைமாநகர்க் கன்புசெய்பவர் |
3.110.11 |
மெய்யுணர்வு தரும் கல்வியறிவு இல்லாத சமணர், புத்தர்களாகிய பித்தர்களின் குற்றங்களை நீக்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கொச்சை மாநகரிடத்து அன்பு செய்பவர்களுடைய குணங்களை எடுத்துக் கூறுங்கள்.
| 3989 | கழுமலத்தினுட்
கடவுள்பாதமே முழுதும்வல்லவர்க் கின்பமேதரு |
3.110.12 |
திருக்கழுமலம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற கடவுளாகிய சிவபெருமானின் திருவடிகளையே தியானிக்கின்ற ஞானசம்பந்தனின் இத்தமிழ்மாலையை முழுமையாக ஓதவல்லவர்கட்கு முக்கண் இறையாகிய அச்சிவபெருமான் அனைத்து இன்பங்களையும் தந்தருள்வான்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.110.திருப்பிரமபுரம் , என்னும், வீற்றிருந்தருளுகின்ற, போற்றி, சிவபெருமான், வினையே, திருத்தலத்தில், சிவபெருமானின், வீற்றிருந்தருளும், கொண்ட, திருமுறை, வினைகள், திருப்பிரமபுரம், அழகிய, நல்ல, மாநகரில், பெறுவர், சிவபெருமானைத், விளங்கும், போன்று, பதிகங்கள், தேவாரப், மூன்றாம், திருச்சிற்றம்பலம், நன்னகரில், சிவபெருமானே, வாழ்கின்ற, ஆணிப்பொன், புகழுடன்