பதினேழாவது அத்தியாயம் (ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத ஸப்ததஷோ அத்யாய:। ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம்(வாழ்க்கையின் மூன்று கோணங்கள்) |
அர்ஜுன உவாச। |
யே ஷாஸ்த்ரவிதிமுத்ஸ்ருஜ்ய யஜந்தே ஷ்ரத்தயாந்விதா:। தேஷாம் நிஷ்டா து கா க்ருஷ்ண ஸத்த்வமாஹோ ரஜஸ்தம:॥ 17.1 ॥ |
அர்ஜுனன் கேட்டது : கிருஷ்ணா ! யார் சாஸ்திர விதிப்படி அல்லாமல், ஆனால் நம்பிக்கையுடன் வழிபடுகிறார்களோ அவர்களின் நிலை என்ன ? சத்வ குணமா ? ரஜோ குணமா ? தமோ குணமா ?
ஸ்ரீபகவாநுவாச। |
த்ரிவிதா பவதி ஷ்ரத்தா தேஹிநாம் ஸா ஸ்வபாவஜா। ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ஷ்ருணு॥ 17.2 ॥ |
ஸ்ரீ பகவான் கூறினார்: மனிதர்களுக்கு இயல்பாக அமைந்துள்ள அந்த நம்பிக்கைகள் சாத்வீகம், ராஜசம், தாமசம் என்று மூன்று விதமாக உள்ளது. அதை கேள்.
ஸத்த்வாநுரூபா ஸர்வஸ்ய ஷ்ரத்தா பவதி பாரத। ஷ்ரத்தாமயோ அயம் புருஷோ யோ யச்ச்ரத்த: ஸ ஏவ ஸ:॥ 17.3 ॥ |
அர்ஜுனா ! இயல்பிற்கு ஏற்பவே மனிதனின் நம்பிக்கைகள் அமைகின்றன. நம்பிக்கைகளின் விளைவே மனிதன். நம்பிக்கைகளே அவனை உருவாக்குகின்றன.
யஜந்தே ஸாத்த்விகா தேவாந்யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா:। ப்ரேதாந்பூதகணாம்ஷ்சாந்யே யஜந்தே தாமஸா ஜநா:॥ 17.4 ॥ |
சாத்வீகர்கள் தேவர்களை வணங்குகிறார்கள். ராஜச இயல்பினர் யட்சர்களையும் ராட்சசர்களையும், தாமச இயல்பினர் ஆவிகளையும் பூதங்களையும் வழிபடுகிறார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினேழாவது அத்தியாயம் (ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, யோகம், பகவத்கீதை, ஷ்ரத்தாத்ரயவிபாக, ஸ்ரீமத், பதினேழாவது, யஜந்தே, குணமா, அத்தியாயம், பவதி, நம்பிக்கைகள், இயல்பினர், ஷ்ரத்தா, இந்து, bhagavad, gita, ஸ்ரீ, மூன்று