ஒன்பதாவது அத்தியாயம் (ராஜவித்யாராஜகுஹ்ய யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத நவமோ அத்யாய:। ராஜவித்யாராஜகுஹ்ய யோகம்(பக்தியே ரகசியம்) |
ஸ்ரீபகவாநுவாச। |
இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே। ஜ்ஞாநம் விஜ்ஞாநஸஹிதம் யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே அஷுபாத்॥ 9.1 ॥ |
ஸ்ரீ பகவான் கூறினார்: எதை அறிந்தால் தடைகளிலிருந்து விடுபடுவாயோ, விஞ்ஜானத்துடன் கூடியதும் அதிரகசியமானதுமான அந்த பாதையை தவறான பார்வையில்லாதவனான உனக்கு சொல்கிறேன்.
ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரமிதமுத்தமம்। ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம் ஸுஸுகம் கர்துமவ்யயம்॥ 9.2 ॥ |
இந்த பாதை வித்தைகளுள் தலை சிறந்தது, அதிரகசியமானது, புனிதபடுத்துவதில் தலை சிறந்தது, கண்கூடாக உணரத்தக்கது, தர்மத்துடன் கூடியது, செய்வதற்கு இன்பமானது, அழிவற்றது.
அஷ்ரத்ததாநா: புருஷா தர்மஸ்யாஸ்ய பரம்தப। அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ருத்யுஸம்ஸாரவர்த்மநி॥ 9.3 ॥ |
எதிரிகளை வாட்டுபவனே ! இந்த தர்மத்தில் நம்பிக்கையில்லாதவர்கள் என்னை அடையாமல் மரணத்துடன் கூடிய உலக வாழ்க்கையில் உழல்கிறான்.
மயா ததமிதம் ஸர்வம் ஜகதவ்யக்தமூர்திநா। மத்ஸ்தாநி ஸர்வபூதாநி ந சாஹம் தேஷ்வவஸ்தித:॥ 9.4 ॥ |
புலன்களுக்கு தென்படாத என்னால் இந்த உலகம் அனைத்தும் வியப்பிக்கபட்டுள்ளது. எல்லா உயிர்களும் என்னிடம் இருக்கின்றன, நானோ அவற்றில் இல்லை.
ந ச மத்ஸ்தாநி பூதாநி பஷ்ய மே யோகமைஷ்வரம்। பூதப்ருந்ந ச பூதஸ்தோ மமாத்மா பூதபாவந:॥ 9.5 ॥ |
உயிரினங்கள் என்னில் இல்லை, என் தெய்வீக ஆற்றலை பார்—உயிரினங்களை நானே படைக்கிறேன், தாங்குகிறேன், ஆனால் நான் அவற்றில் இல்லை.
யதாகாஷஸ்திதோ நித்யம் வாயு: ஸர்வத்ரகோ மஹாந்। ததா ஸர்வாணி பூதாநி மத்ஸ்தாநீத்யுபதாரய॥ 9.6 ॥ |
எங்கும் நிறைந்ததும் ஆற்றல் வாய்ந்ததுமான காற்று எப்படி எப்போதும் ஆகாசத்தில் இருக்கிறதோ, அப்படியே எல்லா உயிர்களும் என்னிடம் உள்ளன என்பதை தெரிந்துகொள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒன்பதாவது அத்தியாயம் (ராஜவித்யாராஜகுஹ்ய யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, யோகம், பகவத்கீதை, ராஜவித்யாராஜகுஹ்ய, ஸ்ரீமத், ஒன்பதாவது, இல்லை, அத்தியாயம், உயிர்களும், என்னிடம், அவற்றில், எல்லா, பூதாநி, இந்து, bhagavad, gita, ஸ்ரீ, சிறந்தது, மத்ஸ்தாநி