20. சதாசிவம் - ஞானக் குறள்

பத்துத் திசையும் பரந்த கடலுலகும் ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம். |
191 |
விண்ணிறைந்து நின்று விளங்குஞ் சுடரொளிபோல் உண்ணிறைந்து நிற்குஞ் சிவம். |
192 |
ஆகமுஞ் சீவனு மாசையுந் தானாகி ஏகமாய் நிற்குஞ் சிவம். |
193 |
வாயுவாய் மன்னுயிராய் மற்றவற்றி னுட்பொருளாய் ஆயுமிடந் தானே சிவம். |
194 |
எண்ணிறந்த யோனி பலவாய்ப் பரந்தெங்கும் உண்ணிறைந்து நிற்குஞ் சிவம். |
195 |
ஒன்றேதா னூழி முதலாகிப் பல்லுயிர்க்கும் ஒன்றாகி நிற்குஞ் சிவம். |
196 |
மூலமொன் றாகி முடிவொன்றா யெவ்வுயிர்க்கும் காலமாய் நிற்குஞ் சிவம். |
197 |
மண்ணிற் பிறந்த வுயிர்க்கெல்லாந் தானாகி விண்ணகமே யாகுஞ் சிவம். |
198 |
தோற்றமது வீடாகித் தொல்லைமுத லொன்றாகி ஏத்தவரு மீச னுளன். |
199 |
நிற்கும் பொருளும் நடப்பனவுந் தானாகி உற்றெங்கும் நிற்குஞ் சிவம். |
200 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
20. சதாசிவம் - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - சிவம், நிற்குஞ், தானாகி, உண்ணிறைந்து