19.தூயவொளி காண்டல் - ஞானக் குறள்

தோன்றிய தெல்லாந் தொடக்கறுத்துத் தூய்வெளியாய்த் தோன்றியக் காற்றூய வொளி. |
181 |
தெளிவாய தேசவிளக் கொளியைக் காணில் வெளியாய வீடதுவே யாம். |
182 |
மின்போ லுருவ விளக்கொளிபோல் மேற்காணில் முன்போல மூலம் புகும். |
183 |
பளிங்கு வலம்புரி பானிகர்த்த தாகில் துளங்கொளியாந் தூய நெறி. |
184 |
சங்கு நிறம்போற் றவளவொளி காணில் அங்கையி னெல்லியே யாகும். |
185 |
துளங்கிய தூண்டா விளக்கொளி காணில் விளங்கிய வீடாம் விரைந்து. |
186 |
மின்மினி போன்ற விளக்காகத் தான்தோன்றில் அன்னப் பறவையே யாம். |
187 |
உள்ளொளி தோன்றி லுணரி லருளொளி அவ்வொளி யாதி யொளி. |
188 |
பரந்த விசும்பிற் பரந்த வொளிகாணில் பரம்பரமே யாய வொளி. |
189 |
ஆதியொளியாகி யாள்வானுந் தானாகி ஆதி யவனுருவு மாம். |
190 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
19.தூயவொளி காண்டல் - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - காணில், பரந்த, யாம், வொளி