ஆரூடப் பாடல் - 3, 2, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

ஜீவிய காலமெல்லாம் வறுமையால் வாடி நின்றாய் பாவிகள் சிலபேராலே பலவித பொருளைத் தோற்றாய் ஆவியை ஒழிப்பதற்கும் யோசிப்பார் கவனம் வைப்பாய் சேவித்தே ஈசன் தன்னை ஜெகமதில் வாழ்வாய் முன்னே. |
மூன்றும், இரண்டும், மூன்றும் விழுந்திருப்பது உன் கஷ்ட நிலையினையே காட்டுகிறது. தீயவர்களினால் உன் பொருளை இழந்திருப்பாய். அவர்களினால் உன் உயிருக்கும் ஆபத்துண்டு. கவனமாய் இரு!, எல்லாம் வல்ல ஈசனை வணங்கி நலமாய் வாழ்ந்திடு என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 3, 2, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடப், மூன்றும்