கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்
| ஊட்டச்சத்துக்கள் | பலன்கள் | ஊட்டச்சத்து அடங்கிய பொருட்கள் |
| புரதச்சத்து | கருவில் குழந்தை உருவாவதற்கான திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. கர்ப்பப்பை வலுவாக இருப்பதற்கும் நச்சுக்கொடி உருவாவதற்கும் புரதச்சத்து அவசியம். | பச்சைக் காய்கறிகள், பால், பால் பொருள்கள், இறைச்சி, மீன், பருப்பு வகைகள், கடலை, தானியங்கள். |
| இரும்புச்சத்து | பிரசவ காலத்தில் ரத்த சோகை வராமல் தடுக்கிறது. குழந்தை பிறந்தவுடன் பயன்படுத்திக் கொள்ள வசதியாக தாய்க்குக் கிடைக்கும் இரும்புச்சத்தை கருவில் உள்ள குழந்தை தனது கல்லீரலில் சேமித்து வைத்துக் கொள்கிறது. | கீரைகள், சுண்டைக்காய், பாகற்காய், வெல்லம், எள், பேரீச்சம்பழம், முட்டை, இறைச்சி, தானிய வகைகள், முந்திரி, பாதாம் போன்ற கொட்டைவகைகள். |
| கார்போஹைட்ரேட் | கர்ப்பக் காலத்தில் இயல்பைவிட அதிகக் கலோரிகள் தேவை என்பதால் கார்போஹைட்ரேட் சத்து தேவை. எனினும் மாவுச் சத்து அதிகமானால் உடல் பருமன் ஏற்படும். | பால், தேன், உருளைக் கிழங்கு, பழங்கள், மாவுப் பொருள். |
| கால்ஷியம் | குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கும் கரு குழந்தைக்கு பற்கள் உருவாவதற்கும் கால்சியம் மிகவும் அவசியம். | பால் மற்றும் பால் பொருட்கள், முட்டை, கிழங்கு வகைகள், பழங்கள், மாவுப் பொருள். |
| வைட்டமின் | சமச்சீர் உணவின் அடிப்படையில் வைட்டமின்கள் உடலில் சேர்வதற்கு கொழுப்புச் சத்து அவசியம். ஆனால் அதிகக் கொழுப்புச் சத்து உடல் பருமனை ஏற்படுத்தும். | வெண்ணெய், நெய், எண்ணெய், ஆட்டிறைச்சி, கோழி, முட்டை, முந்திரி, பாதாம் போன்ற கொட்டை வகைகள். |
| வைட்டமின்-A | தோல், கண்கள், எலும்புகள் உள்பட உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்திற்குத் இச்சத்து தேவை. | பால், வெண்ணெய், முட்டை, கேரட், பப்பாளி, மாம்பழம், கீரைகள், மீன். |
| வைட்டமின்-B | மலச்சிக்கல், நரம்புத்தளர்ச்சி, பிரிவுகள், தோல் நோய்கள் வராமல், வைட்டமின்- ஏ சத்துக்கள் தடுக்கின்றன. ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு வைட்டமின் - பி சத்து தேவையாயுள்ளது. | பால், முட்டை, நல்லெண்ணெய், கைக்குத்தல் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், இறைச்சி. |
| வைட்டமின்-C | கருவில் வளரும் குழந்தையின் தோல், எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின்-சி உதவுகிறது. நச்சுக்கொடி வலுவடையும் இரும்புச்சத்தை உட்கிரகிக்கவும் வைட்டமின்-சி உதவுகிறது. | எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யாப் பழம், ஆரஞ்சு, தக்காளி, பருப்பு வகைகள், முருங்கைக்காய், முள்ளங்கி, உருளைக் கிழங்கு, கொத்தமல்லி (இவற்றை அதிக நேரம் சமைக்கும் நிலையில் வைட்டமின் சத்துக்கள் போய்விடும் என்பதை மறந்து விடக்கூடாது). |
| வைட்டமின்-D | கால்சியச்சத்தை உட்கிரகிக்க வைட்டமின்-டி உதவுகிறது. எலும்பு வளர்ச்சிக்கும் உறுதிக்கும் கால்சியச்சத்து தேவை. | சூரிய ஒளி, வெண்ணெய், பாலாடைக்கட்டி, முட்டை, மீன், ஈரல். |
| வைட்டமின்-E | சீரானசத்து ஓட்டத்திற்கு வைட்டமின்-ஈ உதவுகிறது. | கோதுமை, ஆப்பிள், கேரட், முட்டைக்கோஸ், கீரைகள், முட்டையின் மஞ்சள் கரு. |
| வைட்டமின்-K | ரத்தம் உறையும் தன்மையைக் கொடுக்கிறது. | பச்சைக் காய்கறிகள், முட்டை தானிய வகைகள், உருளைக்கிழங்கு. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், வைட்டமின், பால், முட்டை, பெண்கள், வகைகள், சத்து, கர்ப்பிணி, உதவுகிறது, கட்டுரைகள், தேவையான, பெண்களுக்கு, தேவை, ஊட்டச்சத்துக்கள், articles, மீன், அவசியம், பருப்பு, எலும்பு, தோல், வெண்ணெய், கிழங்கு, கீரைகள், இறைச்சி, கருவில், சத்துக்கள், ladies, மருத்துவக், குழந்தை, women, என்ன, மாவுப், பழங்கள், உடல், உருளைக், பொருள், வளர்ச்சிக்கும், கேரட், கோதுமை, கொழுப்புச், section, அதிகக், குழந்தையின், பாதாம், புரதச்சத்து, பொருட்கள், என்பதை, காய்கறிகள், பச்சைக், உருவாவதற்கும், வளர்ச்சிக்கு, காலத்தில், ரத்த, தானிய, முந்திரி, நச்சுக்கொடி, கிடைக்கும், பலன்கள், வராமல், இரும்புச்சத்தை, கார்போஹைட்ரேட்