திருவுந்தியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்

நூல்
| அகளமா யாரு மறிவரி தப்பொருள் சகளமாய் வந்ததென் றுந்தீபற தானாகத் தந்ததென் றுந்தீபற. | 1 |
| பழக்கந் தவிரப் பழகுவ தன்றி உழப்புவ தென்பெணே யுந்தீபற ஒருபொரு ளாலேயென் றுந்தீபற | 2 |
| கண்டத்தைக் கொண்டு கரும முடித்தவர் * பிண்டத்தில் வாராரென் றுந்தீபற பிறப்பிறப் பில்லையென் றுந்தீபற. | 3 |
| * பிண்டத்து |
| * இங்ங னிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன் அங்ங னிருந்ததென் றுந்தீபற அறிவு மறிவதென் றுந்தீபற. | 4 |
| * எங்ங |
| ஏகனு மாகி யநேகனு மானவன் நாதனு மானானென் றுந்தீபற நம்மையே யாண்டனென் றுந்தீபற. | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவுந்தியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், றுந்தீபற, திருவுந்தியார், நூல்கள், நூல், சித்தாந்த, சாத்திரங்கள், னிருந்ததென், இலக்கியங்கள், சைவசித்தாந்த, பற்றியும்