திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்

| கொல்கரியி னீற்றறையி னஞ்சிற் கொலை தவிர்த்தல் கல்லே மிதப்பாக் கடனீந்தல் - நல்ல மருவார் மறைக்காட்டின் வாசல்திரப் பித்தல் *திருவாமூ ராளி செயல்.  | 
    71 | 
| *திருவாகீசன்றன் செயல் | 
| மோக மறுத்திடின்நாம் முத்தி கொடுப்பதென ஆகமங்கள் சொன்ன வவர்தம்மைத் - தோகையர்பால் தூதாகப் போகவிடும் வன்றொண்டன் *தொண்டுதனை ஏதாகச் சொல்வே னியான்.  | 
    72 | 
| *தொண்டுகளை | 
| பாய்பரியோன் றந்த பரமானந் தப்பயனைத் தூயதிரு வாய்மலராற் சொற்செய்து - மாயக் கருவாதை யாமறியா வாறுசெய்தான் கண்டாய் திருவாத வூராளுந் தேன்.  | 
    73 | 
| அம்மையிலு மிம்மையிலு மச்சந் தவிர்த்தடியார் எம்மையுமா யெங்கு மியங்குதலான் - மெய்ம்மைச் சிவயோக மேயோக மல்லாத யோகம் அவயோக மென்றே யறி.  | 
    74 | 
| மன்னனரு ளெவ்வண்ண மானுடர்பான் மாணவக அன்ன *வகையே யரனருளு - மென்னில் அடியவரே யெல்லாரு மாங்கவர்தா மொப்பில் அடியவரே யெல்லா மறி.  | 
    75 | 
| *வகையே யானருளு | 
			தேடல் தொடர்பான தகவல்கள்:
			
	
  திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தாந்த, திருக்களிற்றுப்படியார், சாத்திரங்கள், அடியவரே, *வகையே, இலக்கியங்கள், செயல்