சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்

| 
          தன்னியல் பொழியப் பூவும் தழலும்வந் தணைய நீரின்  மன்னிய திரண்டு செய்தி வருமிரு வினையி னானும் உன்னிய இன்பத் துன்பம் உறும்உயி ருணர்வி லாத துன்னிய அசித்தை இன்பத் துன்பங்கள் சூழ்ந்தி டாவே.  | 
    96 | 
| 
          இம்மையின் முயற்சி யாலே இருநிதி ஈட்டி இன்பம்  இம்மையே நுகர்வர் செய்தி இலாதவர் பொருளு மின்றி இம்மையே இடரு ழப்பர் வேறிரு வினைய துண்டேல் இம்மையின் முயற்சி யின்றி எய்திட வேண்டும் இங்கே.  | 
    97 | 
| 
          இருவினைச் செயல்காண் இம்மை இரும்பொரு ளின்பம் வேண்டி  வருவினை செய்யுங் காலை மடிவரும் மடியு மின்றித் தருவினை யதனில் அந்தந் தானறும் துயருந் தங்கும் ஒருவினை செய்யா தோரும் உடையர்இவ் வுலகத் துள்ளே.  | 
    98 | 
| 
          பேறிழ வின்ப மோடு பிணிமூப்புச் சாக்கா டென்னும்  ஆறுமுன் கருவுட் பட்ட தவ்விதி அனுப வத்தால் கூறிடும் முன்பு செய்த கன்மமிங் கிவற்றிற் கேது தேறுநீ இனிச்செய் கன்மம் மேலுடற் சேரு மென்றே.  | 
    99 | 
| 
          உடற்செயல் கன்மம் இந்த உடல்வந்த வாறே தென்னின்  விடப்படு முன்னு டம்பின் வினைஇந்த உடல்வி ளைக்கும் தொடர்ச்சியால் ஒன்றுக் கொன்று தொன்றுதொட் டநாதி வித்தின் இடத்தினின் மரம்ம ரத்தின் வித்தும்வந் தியையு மாபோல்.  | 
    100 | 
			தேடல் தொடர்பான தகவல்கள்:
			
	
  சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சுபக்கம், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, சித்தியார், இம்மையே, கன்மம், முயற்சி, இலக்கியங்கள், செய்தி, இன்பத், இம்மையின்