சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்

| கற்றநூற் பொருளும் சொல்லும் கருத்தினில் அடங்கித் தோன்றும் பெற்றியும் சாக்கி ராதி உயிரினிற் பிறந்தொ டுக்கம் உற்றதும் போல வெல்லா உலகமும் உதித்தொ டுங்கப் பற்றொடு பற்ற தின்றி நின்றனன் பரனு மன்றே. | 51 | 
| உயிரவை ஒடுங்கிப் பின்னும் உதிப்பதென் அரன்பா லென்னில் செயிருறு மலத்தி னாகும் சிதைந்ததே தென்னிற் சித்த(து) அயர்வொரிக் காரி யங்கள் அழியுங்கா ரணங்கி டக்கும் பயில்தரு காரி யம்பின் பண்டுபோற் பண்ணு மீசன். | 52 | 
| தோற்றுவித்தளித்துப் பின்னும் துடைத்தருள் தொழில்கள் மூன்றும் போற்றவே உடைய னீசன் புகுந்தது விகார மென்னில் சாற்றிய கதிரோன் நிற்கத் தாமரை அலருங் காந்தம் காற்றிடும் கனலை நீரும் கரந்திடும் காசி னிக்கே. | 53 | 
| உரைத்தஇத் தொழில்கள் மூன்றும் மூவருக் கலகம் ஓத வரைத்தொரு வனுக்கே யாக்கி வைத்ததிங் கென்னை யென்னின் விரைக்கம லத்தோன் மாலும் ஏவலான் மேவி னோர்கள் புரைத்ததி கார சத்தி புண்ணியம் நண்ண லாலே. | 54 | 
| இறுதியாம் காலந் தன்னில் ஒருவனே இருவ ருந்தம் உறுதியின் நின்றா ரென்னின் இறுதிதா னுண்டா காதாம் அறுதியில் அரனே யெல்லாம் அழித்தலால் அவனா லின்னும் பெறுதுநாம் ஆக்கம் நோக்கம் பேரதி கரணத் தாலே. | 55 | 
			தேடல் தொடர்பான தகவல்கள்:
			
	
  சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சித்தியார், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, மூன்றும், தொழில்கள், இலக்கியங்கள், பின்னும், காரி
