சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்

|
உருவின்க ணேமருவி வரில்இன்று தேரைஉரை உளதுங்கள் நூலின் மறையும், தருகின்ற நாதரவர் இவரென்று நாமமது தரவந்தி டாமை யதனால், வருமென்று நேடியெனில் வளர்கின்ற தீவதனில் வருகிந்ற வாடை பலவால், ஒருதந்து வாயனவன் இவனென்ற போதிலிவை உளதென்று நீடிய வையே. |
196 |
|
மறைநின்று நாலுதிசை யவர்ஒன்ற தாகவரும் உரை தந்த வாய்மை அதனால், நிறைவென்று நீடுமெனில் வனையுங்க டாதிபல சொலவொன்றி நீடி யுளதாம், குறைவின்றி நாடும் மொழி அவைசென்று கூடுவதொர் குணமுண்ட தாகு மலர்தான், உறைகின்ற மாலைதனில் உளதென்ற தாகுமெனின் உணர்வின்ற தாழி ஒலியே. |
197 |
|
உடல்நின்று நாமுணரு மதுகண்ட வாறொருவன் உலகங்க ளேஉ ருவமாய், இடைநின்று மாமறைக ளவைஅன்று வாய்மொழிய இவைகொண்டு லோக நெறியின், கடனின்று வாழுமது கருதும்பின் ஆணைவழி கருமஞ்செய் காசினி யுளோர், திடமென்று சீர்அரச னுரைதங்கும் ஓலைதிரு முகமென்று சூடு செயலே. |
198 |
|
முடிவின்றி வேதியர்கள் முதல்வந்த மூவர்களும் மொழி யும்சொல் ஆரிய மெனில், கடிவின்றி யேகணித ரவர்கண்ட வாறதுவென் வடகண்ட சாதி கடியா(து), ஒடிவின்றி ஓதுவதென் உரைதங்கு வேதமொழி உளதென்று கூறு மவர்தாம், அடியின்று தானெனும தறிவின்றி ஈனுமவர் இலையென்ற ஆத ரவதே. |
199 |
|
அறிகின்ற பான்மைஅவ யவநின்ற தாகில்அணு அழியுங்க டாதி யெனவே, செறிகின்ற வாறதிலை யெனின்வந்து சேருமது திடமன்றுகூட வொருவன், குறிகொண்டு காரின் முளை வருகின்ற பீசமவை குலையொன்றி வேனி லழியும், உறுகின்ற காலமவை உடனின்று போயழியும் உலகென்று நீடி யிலதே. |
200 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞான, சித்தாந்த, சாத்திரங்கள், பரபக்கம், சித்தியார், மொழி, நீடி, இலக்கியங்கள், உளதென்று