சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்

|
இருபான்மையர் இவர்மண்டலர் செம்போதகர் என்றே வருபான்மையர் இவர்மண்டலர் மண்மேல்வரு நூலும் தருபான்மையர் எனின்நீதல மதில்வாழ்பவர் தம்போல் ஒருபான்மையின் உளராகுவர் உணராதுரை செய்தாய். |
176 |
|
உயிரானவை உடல்தீண்டிடல் ஒட்டுக்கலப் பெய்தும் பயில்வால்உணர் வெய்தும்மெனும் மொழியானவை பழுதாம் துயிலார்தரு மவர்பாலகர் தொடரார்அறி வினைநீ செயிரார்தரும் உரையேதரும் அதுவோஉன செயலே. |
177 |
|
அணுவானவை கீழ்மேல்உள வானால்அவ யவமும் நணுகாவென லாமேவரின் நாசம்அவை யெய்தும் அணுகாவெனின் இறைதொள்ளைகொள் ஆகம்முள வாகும் துணிவாலிவை கலவாபல தொகையாம்வகை இலவாம். |
178 |
|
மிகையாம்அணு உளவாகையின் அவையாம்மிக வென்னில் தொகைநாலிடை அறலால்அவை தொகுமாறில வாகும் பகையாகையின் மிசைதாழ்மையின் நிலையாவகை பண்ணும் நகையாம்உரை கழியாயிரம் அவைதூணென நண்ணா. |
179 |
|
கூடாஅணு அறியாமையின் வளிகூட்டுதல் கூறின் நாடாவளி அணுவானவை நணுகச்செயும் அவரை நீடாவினை தன்னாலெனின் நினைவின்றது இன்றாம் தேடாயொரு வனைநீஇவை செய்வானுள னென்றே. |
180 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞான, சித்தாந்த, சாத்திரங்கள், பரபக்கம், சித்தியார், வாகும், அணுவானவை, இலக்கியங்கள், இவர்மண்டலர்