போற்றிப் பஃறொடை - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சிந்தையுருக முலையுருகுந் தீஞ்சுவைப்பால் வந்துமடுப் பக்கண்டு வாழ்ந்திருப்பப் - பந்தித்த பாசப் பெருங்கயிற்றாற் பல்லுயிரும் பாலிக்க நேசத்தை வைத்த நெறிபோற்றி - பாசற்ற பாளைப் பசும்பதத்தும் பாலனா மப்பதத்து நாளுக்கு நாட்சகல ஞானத்து - மூள்வித்துக் கொண்டாள வாளக் கருவிகொடுத் தொக்க நின்று பண்டாரி யான படி போற்றி - தண்டாத புன்புலால் போர்த்த புழுக்குரம்பை மாமனையில் அன்புசேர் கின்றனகட் டைந்தாக்கி - முன்புள்ள |
உண்மை நிலைமை யொருகா லகலாது திண்மை மலத்தாற் சிறையாக்கிக் - கண்மறைத்து மூலவருங் கட்டிலுயிர் மூடமா யுட்கிடப்பக் கால நியதி யதுகாட்டி - மேலோங்கு முந்திவியன் கட்டிலுயிர் சேர்த்துக் கலைவித்தை யந்தவராக மவைமுன்பு - தந்த தொழிலறி விச்சை துணையாக மானி நெழிலுடைய முக்குணமுமெய்தி - மருளோடு மன்னு மிதயத்திற் சித்தத்தாற் கண்ட பொருள் இன்ன பொருளென் றியம்பவொண்ணா - வந்நிலை போய்க் |
கண்டவியன் கட்டிற் கருவிகளீ ரைந்தொழியக் கொண்டுநியமித்தற்றை நாட்கொடுப்பப் - பண்டை யிருவினையான் முன்புள்ள வின்பத்துன் பங்கள் மருவும்வகை யங்கே மருவி - யுருவுடனின் றோங்கு நுதலாய வோலக்க மண்டபத்திற் போங்கருவி யெல்லாம் புகுந்தீண்டி - நீங்காத முன்னை மலத்திருளுண் மூடா வகையகத்துள் துன்னுமிரு ணீக்குஞ் சுடரேபோ - லந்நிலையே சூக்கஞ் சுடருருவிற் பெய்து தொழிற்குரியர் ஆக்கிப் பணித்த வறம் போற்றி - வேட்கைமிகு |
முண்டிப் பொருட்டா லொருகா லவியாது மண்டியெரி யும்பெருந்தீ மாற்றுதற்குத் திண்டிறல் சேர் வல்லார்கள் வல்ல வகையாற் றொழில்புரிதல் எல்லா முடனே யொருங்கிசைந்து - செல்காலை முட்டாமற் செய்வினைக்கும் முற்செய்வினைக் குஞ் செலவு பட்டோலை தீட்டும் படிபோற்றி - நட்டோங்கு மிந்நிலைமை மானுடருக் கேயன்றி யெண்ணிலா மன்னுயிர்க்கு மிந்த வழக்கேயாய் - முன்னுடைய நாணாள் வரையி லுடல்பிரித்து நல்வினைக்கண் வாணாளின் மாலா யயனாகி - நீணாகர் வானாடர் கோமுதலாய் வந்த பெரும்பதத்து நானா விதத்தா நலம் பெறுநாள் - தான்மாள வெற்றிக் கடுந்தூதர் வேகத் துடன் வந்து பற்றித்தம் வெங்குருவின் பாற்காட்ட விற்றைக்கும் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
போற்றிப் பஃறொடை - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், பஃறொடை, சாத்திரங்கள், போற்றிப், சித்தாந்த, கட்டிலுயிர், முன்புள்ள, போற்றி, இலக்கியங்கள்