2 நாள் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 1
2 சாலமோன், ஆயிரவர், நூற்றுவர் தலைவர்களுக்கும், நீதிபதிகளுக்கும், இஸ்ராயேலரின் தலைவர்கள், குடும்பத் தலைவர்கள் அனைவர்க்கும் தம் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார்.
3 அவரும் அவரோடு அங்குக் கூடியிருந்தவர் அனைவரும் காபாவோன் மேட்டுக்குப் போனார்கள். ஆண்டவரின் அடியான் மோயீசன் பாலைவனத்தில் இருந்த போது செய்து வைத்திருந்த உடன்படிக்கைக் கூடாரம் அந்த இடத்திலேயே இருந்தது.
4 ஏற்கனெவே, தாவீது கரியாத்தியாரீமிலிருந்து யெருசலேமுக்குக் கடவுளின் திருப்பேழையைக் கொண்டு வந்திருந்தார். அங்கே அதற்கெனத் தாம் தயாரித்திருந்த இடத்தில் ஒரு கூடாரத்தை அமைத்திருந்தார்.
5 மேலும் கூரின் மகன் ஊரியின் புதல்வன் பெசலேயெலால் கட்டப்பட்டிருந்த வெண்கலப்பீடம், அங்கே ஆண்டவரின் கூடாரத்தின் முன் இருந்தது. சாலமோனும் மக்கள் கூட்டமும் அந்த இடத்திற்குச் சென்றனர்.
6 சாலமோன் ஆண்டவரின் உடன்படிக்கைக் கூடாரத்துக்கு முன்பாக அமைத்திருந்த வெண்கலப் பீடத்தின் மேல் ஏறி, அதன் மேல் ஆயிரம் தகனப் பலிகளைச் செலுத்தினார்.
7 அன்றிரவே கடவுள் அவருக்குத் தோன்றி,
8 நீ விரும்புவதைக் கேள்" என்று கேட்டார். சாலமோன் கடவுளை நோக்கி, "என் தந்தை தாவீதுக்கு நீர் பேரிரக்கம் காட்டினீர்@
9 அவருக்குப்பின் என்னை அரசனாக்கினீர். இப்போது, கடவுளாகிய ஆண்டவரே, என் தந்தை தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி மன்றாடுகிறேன்.
10 நீர் நிலத்தின் மணல் போன்ற எண்ணற்ற மக்களுக்கு என்னை அரசனாக்கியிருக்கிறீர். எனவே நான் இம்மக்களை நன்கு நடத்திச் செல்லவேண்டிய ஞானத்தையும் அறிவையும் அடியேனுக்குத் தாரும். ஏனெனில் ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய மக்களுக்குத் தகுந்த விதமாய் நீதி வழங்க யாரால் முடியும்?" என்றார்.
11 அப்பொழுது கடவுள் சாலமோனை நோக்கி, "நீ செல்வத்தையும் சொத்தையும் மகிமையையும் உன் பகைவரின் உயிரையும் நீடிய ஆயுளையும் கேளாமல், அரசாளும்படி உன்னிடம் நாம் ஒப்படைத்த நம் மக்களுக்கு நீதி வழங்கத் தேவையான ஞானத்தையும் அறிவையுமே எல்லாவற்றிற்கும் மேலாக நீ விரும்பிக் கேட்டதால்,
12 நாம் உனக்கு ஞானத்தையும் அறிவையும் அளிப்போம்@ மேலும் உனக்கு முன் இருந்த அரசர்களுக்காவது, உனக்குப் பின் வரப்போகும் அரசர்களுக்காவது இல்லாத செல்வத்தையும் சொத்தையும் மகிமையும் நாம் உனக்குத் தருவோம்" என்றார்.
13 பிறகு சாலமோன் காபாவோன் மேட்டிலிருந்து யெருசலேமிலிருந்த உடன்படிக்கைக் கூடாரத்திற்குத் திரும்பி வந்து இஸ்ராயேலை ஆண்டுவந்தார்.
14 சாலமோன் தேர்களையும் குதிரை வீரர்களையும் கொண்ட குதிரைப்படை ஒன்றையும் தோற்றுவித்தார். அவருக்கு ஆயிரத்து நானூறு தேர்கள் இருந்தன, பன்னிரண்டாயிரம் குதிரை வீரரும் இருந்தனர். அவை தேர் நிறுத்தும் நகர்களிலும், யெருசலேமில் தாம் வாழ்ந்து வந்த இடத்துக்கு அருகேயும் இருந்தன.
15 அரசர் யெருசலேமில் வெள்ளியும் பொன்னும் கற்களைப் போன்றும், கேதுரு மரங்கள் சமவெளிகளில் வளரும் அத்தி மரங்களைப்போன்றும் ஏராளமாய்க் கிடைக்கும்படி செய்தார்.
16 அரசரின் வணிகர்கள் எகிப்தினின்று குதிரைகளை விலைக்கு வாங்கிக்கொண்டு வருவார்கள்.
17 அவர்கள் வாங்கி வந்த தேர் ஒன்றின் விலை அறுநூறு சீக்கல் வெள்ளியாகும்@ குதிரை ஒன்றின் விலை நூற்றைம்பது சீக்கல் வெள்ளியாகும். இவர்கள் மூலமே ஏத்தைய அரசர்களும் சீரிய அரசர்களும் இவற்றைப் பெற்று வந்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
2 நாள் ஆகமம் - பழைய ஏற்பாடு, சாலமோன், ஏற்பாடு, பழைய, உடன்படிக்கைக், நாம், நாள், ஞானத்தையும், நீர், குதிரை, ", ஆண்டவரின், ஆகமம், நீதி, என்றார், விலை, அறிவையும், அரசர்களும், செல்வத்தையும், சீக்கல், சொத்தையும், யெருசலேமில், மக்களுக்கு, இருந்தன, வந்த, அரசர்களுக்காவது, ஒன்றின், உனக்கு, தேர், நோக்கி, கொண்டு, தலைவர்கள், காபாவோன், அவரோடு, கடவுளாகிய, திருவிவிலியம், ஆன்மிகம், மகன், இருந்த, அந்த, கடவுள், தந்தை, தாவீதுக்கு, மேல், முன், அங்கே, தாம், மேலும், என்னை