பதினொன்றாவது அத்தியாயம் (விஷ்வரூபதர்ஷந யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
|
பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய
த்வமஸ்ய பூஜ்யஷ்ச குருர்கரீயாந்। ந த்வத்ஸமோ அஸ்த்யப்யதிக: குதோ அந்யோ லோகத்ரயே அப்யப்ரதிமப்ரபாவ॥ 11.43 ॥ |
ஒப்பற்ற பெருமை உடையவனே ! அசைவதும் அசையாததும் நிறைந்த இந்த உலகின் தந்தை நீயே. பூஜிக்கதக்கவனும் மேலான குருவும் நீயே. மூன்று உலகங்களிலும் உனக்கு சமமானவர் இல்லை. உன்னை விட உயர்ந்தவர் யார் இருக்க முடியும்?
|
தஸ்மாத்ப்ரணம்ய ப்ரணிதாய காயம்
ப்ரஸாதயே த்வாமஹமீஷமீட்யம்। பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யு: ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும்॥ 11.44 ॥ |
தேவா ! இறைவனும் போற்றதக்கவனுமாகிய உன்முன் நான் கீழே விழுந்து வணங்குகிறேன். அருள்புரிய வேண்டும். மகனை தந்தையும், நண்பனை நண்பனும், காதலியை காதலனும் பொருத்து கொள்வதுபோல் என்னை பொருத்து அருள் மாறு வேண்டுகிறேன்.
|
அத்ருஷ்டபூர்வம் ஹ்ருஷிதோ அஸ்மி த்ருஷ்ட்வா
பயேந ச ப்ரவ்யதிதம் மநோ மே। ததேவ மே தர்ஷய தேவ ரூபம் ப்ரஸீத தேவேஷ ஜகந்நிவாஸ॥ 11.45 ॥ |
தேவா ! தேவர் தலைவா உலகின் இருப்பிடமானவனே ! முன்பு காணாததை கண்டு மகிழ்கிறேன். ஆனாலும் பயத்தால் என் மனம் நடுங்குகிறது. ( இனிமை ததும்பும் ) அந்த பழைய உருவத்தையே எனக்கு காட்ட வேண்டும், அருள் புரிக.
|
கிரீடிநம் கதிநம் சக்ரஹஸ்தம்
இச்சாமி த்வாம் த்ரஷ்டுமஹம் ததைவ। தேநைவ ரூபேண சதுர்புஜேந ஸஹஸ்ரபாஹோ பவ விஷ்வமூர்தே॥ 11.46 ॥ |
ஆயிரம் கைககள் உடையவனே, உலககெங்கும் நிறைந்த வடிவத்தை உடையவனே ! உன்னை முன் போலவே கிரீடம் தரித்தவனாக, கதை ஏன்தியவனாக, சக்கரத்தை கையில் தாங்கியவனாக நான் தரிசிக்க விரும்புகிறேன், நான்கு கைகள் உடைய அந்த உருவத்துடனேயே இருப்பாயாக.
| ஸ்ரீபகவாநுவாச। |
|
மயா ப்ரஸந்நேந தவார்ஜுநேதம்
ரூபம் பரம் தர்ஷிதமாத்மயோகாத்। தேஜோமயம் விஷ்வமநந்தமாத்யம் யந்மே த்வதந்யேந ந த்ருஷ்டபூர்வம்॥ 11.47 ॥ |
ஸ்ரீ பகவான் கூறினார்: அர்ஜுனா ! ஒளிமயமானதும் எங்கும் நிறைந்ததும், முடிவற்றதும், முதலில் இருந்ததுமான எனது மேலான உருவத்தை மகிழ்ச்சி காரணமாக நான் எனது யோக சக்தியில் உனக்கு காட்டினேன். உன்னை தவிர வேறு யாரும் இந்த முன்பு இதனை கண்டதில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினொன்றாவது அத்தியாயம் (விஷ்வரூபதர்ஷந யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, நான், உடையவனே, பதினொன்றாவது, உன்னை, ஸ்ரீமத், யோகம், விஷ்வரூபதர்ஷந, அத்தியாயம், பொருத்து, வேண்டும், ரூபம், எனது, முன்பு, அந்த, அருள், நீயே, இந்து, gita, bhagavad, நிறைந்த, உலகின், உனக்கு, மேலான, தேவா