பதினொன்றாவது அத்தியாயம் (விஷ்வரூபதர்ஷந யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
|
கஸ்மாச்ச தே ந நமேரந்மஹாத்மந்
கரீயஸே ப்ரஹ்மணோ அப்யாதிகர்த்ரே। அநந்த தேவேஷ ஜகந்நிவாஸ த்வமக்ஷரம் ஸதஸத்தத்பரம் யத்॥ 11.37॥ |
பரம்பொருளே ! முடிவற்றவனே ! தேவர் தலைவனே, உலகின் ஆதாரமே, பிரம்மாவிற்கும் பெரியவனே, முதர்க்காரணமானவனே, தோன்றியதும் தோன்றாததும் அப்பாற்பட்டதுமான அழியா பொருள் நீயே, உன்னை ஏன் வணங்கமாட்டார்கள்.
|
த்வமாதிதேவ: புருஷ: புராண:
த்வமஸ்ய விஷ்வஸ்ய பரம் நிதாநம்। வேத்தாஸி வேத்யம் ச பரம் ச தாம த்வயா ததம் விஷ்வமநந்தரூப॥ 11.38 ॥ |
நீ முழுமுதற்கடவுள், பழமைகளுக்கெல்லாம் பழமையானவன், பிரபஞ்சத்தின் மேலான இருப்பிடம், எண்ணற்ற வடிவங்கள் உடையவன். அறிபவனும் அறியபடுபவனும் நீயே, மேலான நிலையாகவும் நீயே இருக்கிறாய், உலகம் உன்னாலேயே வியாப்பிக்கபட்டிருக்கிறது.
|
வாயுர்யமோ அக்நிர்வருண: ஷஷாங்க:
ப்ரஜாபதிஸ்த்வம் ப்ரபிதாமஹஷ்ச। நமோ நமஸ்தே அஸ்து ஸஹஸ்ரக்ருத்வ: புநஷ்ச பூயோ அபி நமோ நமஸ்தே॥ 11.39 ॥ |
நீயே வாயு, எமன், அக்னி, வருணன், சந்திரன், பிரஜாபதி மற்றும் முப்பாட்டனாக இருக்கிறாய். உனக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம். ஆயிரம் முறை இன்னும் அதற்கு மேலும் உனக்கு நமஸ்காரங்கள்.
|
நம: புரஸ்தாதத ப்ருஷ்டதஸ்தே
நமோ அஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ। அநந்தவீர்யாமிதவிக்ரமஸ்த்வம் ஸர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி ஸர்வ:॥ 11.40 ॥ |
எல்லமானவனே ! உனக்கு முன்னாலும் பின்னாலும் நமஸ்காரம், எல்லா பக்கத்திலும் நமஸ்காரம். நீ அளவற்ற ஆற்றலும், எல்லையற்ற பராகிரமும் உடையவன். நீ அனைத்திலும் நன்றாக வியாப்பித்திருக்கிறாய். அதனால் அனைத்துமாக இருக்கிறாய்.
|
ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்தம்
ஹே க்ருஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி। அஜாநதா மஹிமாநம் தவேதம் மயா ப்ரமாதாத்ப்ரணயேந வா அபி॥ 11.41 ॥ யச்சாவஹாஸார்தமஸத்க்ருதோ அஸி விஹாரஷய்யாஸநபோஜநேஷு। ஏகோ அதவாப்யச்யுத தத்ஸமக்ஷம் தத்க்ஷாமயே த்வாமஹமப்ரமேயம்॥ 11.42 ॥ |
அச்சுதா ! எல்லையற்றவனே ! உனது இந்த மகிமையை அறியாமல் நண்பன் என்று கருதி, கவனமின்றியோ, அன்பினாலோ, ஏ கிருஷ்ணா, ஏ யாதவா, ஏ நண்பா என்று அலட்சியமாக உன்னை அழைத்திருக்கிறேன். விளையாட்டு நேரங்களிலோ, ஓய்வு வேலையிலோ, சும்மா இருக்கும் போதோ, சாப்பாட்டு வேலையிலோ, தனிமையிலோ, பிறர் காணுமாறோ அவ்வாறு உன்னை அவமதித்ததை எல்லாம் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினொன்றாவது அத்தியாயம் (விஷ்வரூபதர்ஷந யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, நீயே, விஷ்வரூபதர்ஷந, இருக்கிறாய், உனக்கு, நமஸ்காரம், பதினொன்றாவது, உன்னை, யோகம், அத்தியாயம், ஸ்ரீமத், bhagavad, மீண்டும், வேலையிலோ, அஸ்து, உடையவன், பரம், மேலான, இந்து, gita