பதினொன்றாவது அத்தியாயம் (விஷ்வரூபதர்ஷந யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
|
அநேகபாஹூதரவக்த்ரநேத்ரம்
பஷ்யாமி த்வாம் ஸர்வதோ அநந்தரூபம்। நாந்தம் ந மத்யம் ந புநஸ்தவாதிம் பஷ்யாமி விஷ்வேஷ்வர விஷ்வரூப॥ 11.16 ॥ |
உலகின் தலைவனே ! எண்ணற்ற கைகளும் வயிறுகளும் வாய்களும் கண்களும் உடைய உனது எல்லையற்ற வடிவத்தை எங்கும் காண்கிறேன். உலக வடிவினனே ! உனது முடிவையோ நடுவையோ ஆரம்பத்தையோ காணமுடியவில்லை.
|
கிரீடிநம் கதிநம் சக்ரிணம் ச
தேஜோராஷிம் ஸர்வதோ தீப்திமந்தம்। பஷ்யாமி த்வாம் துர்நிரீக்ஷ்யம் ஸமந்தாத் தீப்தாநலார்கத்யுதிமப்ரமேயம்॥ 11.17 ॥ |
மகுடம் தரித்து கதை தாங்கி சக்கரம் ஏந்திய பேரொளி பிழம்பான எங்கும் பிரகாசிக்கின்ற கண்ணால் காண முடியாத சுடர் விடுகின்ற நெருப்பு போலவும் சூரியனை போலவும் ஒளிர்கின்ற அளவிட்டு அறியமுடியாத உன்னை எங்கும் காண்கின்றேன்.
|
த்வமக்ஷரம் பரமம் வேதிதவ்யம்
த்வமஸ்ய விஷ்வஸ்ய பரம் நிதாநம்। த்வமவ்யய: ஷாஷ்வததர்மகோப்தா ஸநாதநஸ்த்வம் புருஷோ மதோ மே॥ 11.18 ॥ |
நீ அழிவற்றவன், மேலானவன், அறியபடவேண்டியவன். இந்த பிரபஞ்சத்தின் மேலான இருப்பிடம் நீ. நீ மாறாதவன். தர்மத்தின் நிலையான காவலன். என்றென்றும் இருப்பவன் . நீயே இறைவன் என்பதை நான் உணர்கிறேன்.
|
அநாதிமத்யாந்தமநந்தவீர்யம்
அநந்தபாஹும் ஷஷிஸூர்யநேத்ரம்। பஷ்யாமி த்வாம் தீப்தஹுதாஷவக்த்ரம் ஸ்வதேஜஸா விஷ்வமிதம் தபந்தம்॥ 11.19 ॥ |
நீ ஆதி, நடு, முடிவு இல்லாதவன், எல்லையற்ற ஆற்றல் உடையவன், எண்ணற்ற கைகள் உடையவன், சந்திர சூரியர்களை கண்களாக கொண்டவன், சுடர் விடுகின்ற அக்னி போல் முகம் உடையவன், தேஜசால் இந்த பிரபஞ்சத்தை எரிப்பவனாக உன்னை நான் காண்கின்றேன்.
|
த்யாவாப்ருதிவ்யோரிதமந்தரம் ஹி
வ்யாப்தம் த்வயைகேந திஷஷ்ச ஸர்வா:। த்ருஷ்ட்வாத்புதம் ரூபமுக்ரம் தவேதம் லோகத்ரயம் ப்ரவ்யதிதம் மஹாத்மந்॥ 11.20 ॥ |
பரம்பொருளே ! விண்ணும் மண்ணும் இடைவெளியும் எல்லா திசைகளும் உன் ஒருவனாலேயே வியப்பிக்கபட்டுள்ளது. உனது இந்த உக்கிரமான அற்புத உருவை கண்டு மூன்று உலகங்களும் நடுங்குகின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினொன்றாவது அத்தியாயம் (விஷ்வரூபதர்ஷந யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, பஷ்யாமி, த்வாம், உனது, எங்கும், பதினொன்றாவது, ஸ்ரீமத், விஷ்வரூபதர்ஷந, அத்தியாயம், உடையவன், யோகம், காண்கின்றேன், போலவும், நான், உன்னை, விடுகின்ற, ஸர்வதோ, gita, bhagavad, இந்து, எண்ணற்ற, எல்லையற்ற, சுடர்