பத்தாவது அத்தியாயம் (விபூதி யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
| அர்ஜுன உவாச। |
|
பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவாந்। புருஷம் ஷாஷ்வதம் திவ்யமாதிதேவமஜம் விபும்॥ 10.12 ॥ ஆஹுஸ்த்வாம்ருஷய: ஸர்வே தேவர்ஷிர்நாரதஸ்ததா। அஸிதோ தேவலோ வ்யாஸ: ஸ்வயம் சைவ ப்ரவீஷி மே॥ 10.13 ॥ |
அர்ஜுனன் கூறினான்: நீ மேலான பிரம்மம், உயர்ந்த இருப்பிடம், ஒப்பற்ற புனித பொருள், எல்லா ரிஷிகளும், தேவ ரிஷியான நாரதரும், அஷிதர், தேவலர், வியாசர் போன்ற முனிவர்களும் உன்னை நிலையானவன், ஒளிமயமான இறைவன், முழுமுதற்கடவுள், பிறப்பற்றவன், எங்கும் நிறைந்தவன் என்றெல்லாம் போற்றுகிறார்கள். நீயும் அவ்வாறே சொல்கிறாய்.
|
ஸர்வமேதத்ருதம் மந்யே யந்மாம் வதஸி கேஷவ। ந ஹி தே பகவந்வ்யக்திம் விதுர்தேவா ந தாநவா:॥ 10.14 ॥ |
கேசவா ! எனக்கு எதை சொல்கிறாயோ, அவை எல்லாம் உண்மை என்று கருதுகிறேன். பகவானே ! உனது உண்மை இயல்பை தேவர்களும் அறியவில்லை, அசுரர்களும் அறியவில்லை.
|
ஸ்வயமேவாத்மநாத்மாநம் வேத்த த்வம் புருஷோத்தம। பூதபாவந பூதேஷ தேவதேவ ஜகத்பதே॥ 10.15 ॥ |
புருஷோத்தமா ! உயிர்களை படைத்தவனே, உயிர்களின் தலைவனே, தேவாதிதேவனே, உலகை ஆள்பவனே, உன்னை நீயே அறிவாய், உன்னால் மட்டுமே உன்னை அறிய முடியும். நீ அதை அறிகிறாய்.
|
வக்துமர்ஹஸ்யஷேஷேண திவ்யா ஹ்யாத்மவிபூதய:। யாபிர்விபூதிபிர்லோகாநிமாம்ஸ்த்வம் வ்யாப்ய திஷ்டஸி॥ 10.16 ॥ |
எந்த மகிமைகளால் நீ உலகங்களை வியாப்பித்து, நிற்கிறாயோ, தெய்வீகமான உனது அந்த மகிமைகளை எனக்கு முற்றிலுமாக சொல்ல வேண்டும்.
|
கதம் வித்யாமஹம் யோகிம்ஸ்த்வாம் ஸதா பரிசிந்தயந்। கேஷு கேஷு ச பாவேஷு சிந்த்யோ அஸி பகவந்மயா॥ 10.17 ॥ |
யோகி, நான் எப்போதும் தியானிப்பதன் மூலம் எப்படி உன்னை அறிவது? பகவானே ! உன்னை எந்தெந்த பாவனைகளில் தியானிக்க முடியும்?
தேடல் தொடர்பான தகவல்கள்:
பத்தாவது அத்தியாயம் (விபூதி யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, உன்னை, பகவத்கீதை, பத்தாவது, அத்தியாயம், விபூதி, ஸ்ரீமத், யோகம், பகவானே, உனது, கேஷு, முடியும், அறியவில்லை, உண்மை, புனித, bhagavad, gita, இந்து, பரம், எனக்கு