பன்னிரண்டாவது அத்தியாயம் (பக்தி யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
|
ஸம: ஷத்ரௌ ச மித்ரே ச ததா மாநாபமாநயோ:। ஷீதோஷ்ணஸுகது:கேஷு ஸம: ஸங்கவிவர்ஜித:॥ 12.18 ॥ துல்யநிந்தாஸ்துதிர்மௌநீ ஸம்துஷ்டோ யேந கேநசித்। அநிகேத: ஸ்திரமதிர்பக்திமாந்மே ப்ரியோ நர:॥ 12.19 ॥ |
எதிரி – நண்பன், மானம் – அவமானம், குளிர் – சூடு, சுகம் – துக்கம் போன்ற இருமைகளில் சமமாக இருப்பவன், பற்றற்றவன், புகழ்ச்சி, இகழ்ச்சி இரண்டையும் சமமாக கருதுபவன், மெளனமாக இருப்பவன், கிடைத்ததை கொண்டு திருப்தி அடைபவன், இருப்பிடம் இல்லாதவன், நிலைத்த அறிவு உடையவன், பக்தி உடையவன் எனக்கு பிரியமானவன்.
|
யே து தர்ம்யாம்ருதமிதம் யதோக்தம் பர்யுபாஸதே। ஷ்ரத்ததாநா மத்பரமா பக்தாஸ்தே அதீவ மே ப்ரியா:॥ 12.20 ॥ |
எந்த பக்தர்கள் சிரத்தையுடன் என்னையே கதியாக கொண்டு இங்கே கூறியது போல் இந்த அமுதம் போன்ற தர்மத்தை கடைபிடிக்கிறார்களோ அவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.
|
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே பக்தியோகோ நாம த்வாதஷோ அத்யாய:॥ 12 ॥ |
ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'பக்தி யோகம்' எனப் பெயர் படைத்த பன்னிரண்டாவது அத்தியாயம் நிறைவுற்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பன்னிரண்டாவது அத்தியாயம் (பக்தி யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பக்தி, ஸ்ரீமத், பன்னிரண்டாவது, பகவத்கீதை, அத்தியாயம், யோகம், கொண்டு, உடையவன், எனக்கு, இருப்பவன், இந்து, gita, bhagavad, சமமாக