முதல் அத்தியாயம் (அர்ஜுன விஷாத யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
| அஸ்மாகம் து விஷிஷ்டா யே தாந்நிபோத
த்விஜோத்தம। நாயகா மம ஸைந்யஸ்ய ஸம்ஜ்ஞார்தம் தாந்ப்ரவீமி தே॥ 1.7 ॥ |
மனிதருள் சிறந்தவரே ! நமது படையில் சிறந்த தலைவர்களாக உள்ளவர்களையும் உங்களுக்கு கூறுகிறேன். தெரிந்துகொள்ளுங்கள்.
| பவாந்பீஷ்மஷ்ச கர்ணஷ்ச க்ருபஷ்ச
ஸமிதிம்ஜய:। அஷ்வத்தாமா விகர்ணஷ்ச ஸௌமதத்திஸ்ததைவ ச॥ 1.8 ॥ அந்யே ச பஹவ: ஷூரா மதர்தே த்யக்தஜீவிதா:। நாநாஷஸ்த்ரப்ரஹரணா: ஸர்வே யுத்தவிஷாரதா:॥ 1.9 ॥ |
துரோனாச்சாரியராகிய நீங்கள், பீஷ்மர், கர்ணன், வெற்றி வீரரான கிருபர், அசுவத்தாமன், விகர்ணன், சொமத்தத்தனின் மகனான பூரிசிரவஸ், ஆகியோருடன் மேலும் பல வீரர்களும் உள்ளனர். பலவிதமான ஆயுதங்களை தாங்கிய இவர்கள் போரில் வல்லவர்கள், என்னக்காக உயிரையும் கொடுக்க துணிந்தவர்கள்.
| அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம்
பீஷ்மாபிரக்ஷிதம்। பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்॥ 1.10 ॥ |
பீஷ்மர் காக்கின்ற நமது படை அளவற்று பறந்து கிடக்கிறது. பீமன் காக்கின்ற பாண்டவர் படையோ அளவுக்கு உட்பட்டு நிற்கிறது.
| அயநேஷு ச ஸர்வேஷு யதாபாகமவஸ்திதா:। பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த: ஸர்வ ஏவ ஹி॥ 1.11 ॥ |
நீங்கள் எல்லோரும் உங்கள் அணிவகுப்புகளில் அவரவர் இடங்களில் நின்றுகொண்டு பீஷ்மரையே காக்க வேண்டும் .
| தஸ்ய ஸம்ஜநயந்ஹர்ஷம் குருவ்ருத்த: பிதாமஹ:। ஸிம்ஹநாதம் விநத்யோச்சை: ஷங்கம் தத்மௌ ப்ரதாபவாந்॥ 1.12 ॥ |
வல்லமை பொருந்தியவரும் குரு வம்சத்தில் மூத்தவரும் பாட்டணுமான பீஷ்மர் துரியோதனனுக்கு உற்சாகம் ஊட்டுவதற்காக சிம்ம கர்ஜனை போன்ற உரத்த ஒலியை எழுப்பினார் .சங்கையும் ஊதினார் .
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் அத்தியாயம் (அர்ஜுன விஷாத யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, அர்ஜுன, பீஷ்மர், அத்தியாயம், ஸ்ரீமத், விஷாத, யோகம், காக்கின்ற, பலம், நீங்கள், நமது, bhagavad, இந்து, gita