தகவல் பெறும் உரிமை - தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005
* மான்யம் வழங்கும் திட்டங்களைச் செயல்படுத்தும் முறை, தொகை ஒதுக்கீடு விபரம், மற்றும் அத்தகைய திட்டத்தால் பயன் அடைபவர்கள் பற்றிய விபரம்
* அதனால் வழங்கப்பட்ட சலுகைகள், அனுமதி அல்லது உரிமையை பெற்றுக் கொண்டவர்களைப் பற்றிய விபரங்கள்
* தகவல் கிடைப்பது பற்றிய விபரங்கள் அல்லது அது கொண்டிருக்கும் தகவல் (மின்வடிவத்தில் சுருக்கப்பட்டவை)
* தகவல்கள் பெறுவதில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்த விபரங்கள்
* மக்கள் தொடர்பு அதிகாரிகளின் பெயர் மற்றும் இதர விவரங்கள்
2. அரசு அதிகாரி என்றால் என்ன அர்த்தம்?
இதன் அர்த்தம், கீழ்கண்டவற்றால் தொடங்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட சுயாட்சி செய்யக்கூடிய அதிகாரி அல்லது குழு அல்லது நிறுவனம்
* சட்டத்தின் அடிப்படையில்3. மக்கள் தகவல் தொடர்பு அதிகாரிகள் என்பவர்கள் யார்?
* பாராளுமன்றம் உருவாக்கிய பிற சட்டம்
* மாநில சட்டசபையில் உருவாக்கப்பட்ட பிற சட்டத்தின்படி
* கொடுக்கப்பட்ட அறிவிப்பினால் அல்லது சம்பந்தப்பட்ட அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட உத்தரவு மற்றும்
* ஒரு அமைப்பிற்குச் சொந்தமான, அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள அல்லது அமைப்பால் நிதிஉதவி செய்யப்படுகிற நிறுவனங்கள்
* நேரடியாக அல்லது மறைமுகமாக சம்பந்தப்பட்ட அரசாங்கத்தால் நிதிஉதவி பெறுகின்றன அரசு சாரா அமைப்புகள்
மக்கள் தகவல் தொடர்பு அதிகாரிகள், அரசு அதிகாரிகளால் அனைத்து நிர்வாக அமைப்பிலும் அல்லது அலுவலகங்களிலும் தகவல் சட்டத்தின் அடிப்படையில் தகவல் கேட்கும் குடிமக்களுக்குத் தகவல் கொடுப்பதற்காக நியமிக்கப்படடவர்கள்.
4. மக்கள் தகவல் தொடர்பு அதிகாரியின் கடமைகள் என்ன?
* தகவல் பெறுவது குறித்து ஒரு நபரிடமிருந்து வரும் வேண்டுகோளை மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி கவனித்தல்; ஆனால் அந்த வேண்டுகோள் எழுத்துவடிவில் கொடுக்ப்பட்டதாய் இல்லாமல் இருந்தால், அந்த நபருக்கு அதே விஷயத்தை எழுத்து வடிவில் தருவதற்குத் தேவையான உதவியைத் செய்வது
* தகவல் கோரப்பட்டது அல்லது அதனுடைய பொருள் மற்றொரு அரசு அதிகாரியின் வேலையோடு சம்மந்தப்பட்டிருந்தால், மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி அந்த கோரிக்கையை 5 நாட்களுக்குள் அந்த அரசு அதிகாரியிடம் தகவல் தெரிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கலாம். விண்ணப்பதாரருக்கு இது பற்றி உடனடியாகத் தெரிவித்து விட வேண்டும்.
> * மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி தனது பணியை பிறரிடத்தில் ஒப்படைப்பதற்குப் பிற அதிகாரிகளின் உதவியை நாடலாம்
* மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி, பெறப்பட்ட வேண்டுகோளின் மீது இயன்றவரையில் எவ்வளவு விரைவாக முடியுமோ அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம். எவ்வாறாயினும் வேண்டுகோள் பெறப்பட்ட 30 நாட்களுக்குள் வரையறுக்கப்பட்ட கட்டணம் செலுத்திய நபருக்கு வேண்டிய தகவலை அளித்தல் வேண்டும். அல்லது, பிரிவு 8, 9இல் குறிப்பிடடுள்ள காரணங்களால் வேண்டுகோளை நிராகரிக்கலாம்.
* ஒரு நபரின் வாழ்க்கை அல்லது சுதந்திரம் சம்மந்தப்பட்ட தகவல் பற்றி வேண்டுகோள் விடுத்தால், வேண்டுகோள் விடுவிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் தகவல் தரப்பட வேண்டும்.
* வேண்டுகோளின் மீது, மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி வரையறுக்கப்பட்டுள்ள காலத்திற்குள் முடிவெடுக்கத் தவறிவிட்டால், அந்த வேண்டுகோளை அவர் நிராகரிதுள்ளார் என்று எடுத்துக் கொள்ளலாம்.
* வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டால், மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி வேண்டுகோள் விடுத்தவரிடம் கீழ்கண்ட தகவல்களை கொடுத்தல் வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, Right to Information Act, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, தகவல், அல்லது, தொடர்பு, மக்கள், சட்டம், அதிகாரி, வேண்டுகோள், அந்த, அரசு, வேண்டும், உரிமைச், அறியும், பெறும், வேண்டுகோளை, உரிமை, இந்தியச், விபரங்கள், பற்றிய, | , அதிகாரியின், அதிகாரிகள், நிதிஉதவி, மீது, பெறப்பட்ட, அரசாங்கத்தால், நாட்களுக்குள், நபருக்கு, பற்றி, வேண்டுகோளின், சட்டத்தின், code, விபரம், penal, indian, தண்டனைச், inidan, information, right, அடிப்படையில், உருவாக்கப்பட்ட, இந்திய, அர்த்தம், அதிகாரிகளின், என்ன, சம்பந்தப்பட்ட