தமிழக வனவளம் - தமிழக சிறப்புக் கூறுகள்
காடுகள்
காடுகள் புதுப்பிக்கப்படக் கூடிய ஒரு வளம். நமது வாழ்க்கைக்குத் தேவையான மரம்,
எரிபொருள், தீவனப்பொருள், தோல் பதனிடத் தேவையானப் பொருட்கள், அரக்கு, பிசின்,
தாவரஎண்ணெய், முலிகைகள், மருந்துப்பொருட்கள் ஆகியவற்றைக் காடுகள் அளிக்கின்றன.
தமிழ்நாட்டின் காடுகளை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். அவை;
1.வெப்ப மண்டல ஈரமிக்க பசுமையிலைக்காடுகள்:
1500 மி. மீட்டர்ககும் அதிகமான மழைப்பொழிவு உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயரமான பகுதிகளின் வெப்ப மன்டல ஈரமிக்க பசுமையிலைக் காடுகள் உள்ளன. மரங்கள் உயரமாகவும், அகன்றும் உள்ளன. பெரும்பாலும் கடின மரங்களாக உள்ளன.
2.வெப்ப மண்டல ஈரமான இலையுதிர்க் காடுகள்:
மலைகளின் உயரம் குறைவதாலும் மழைப் பொழிவின் அளவு 1500மில்லி மீட்டர் வரை குறைவதாலும் வெப்ப மண்டல ஈரமிக்க பசுமையிலைக் காடுகள் மெதுவாக வெப்ப மண்டல ஈரமான இலையுதிக் காடுகளாக மாறிவிடுகின்றன.
3.வெப்ப மண்டல வறண்ட இலைடயுதிக் காடுகள்:
மழைப் பொழிவு 1000 மில்லி மீட்டர்முதல் 1500 மில்லி மீட்டர் வரை உள்ள பகுதிகளில் வெப்ப மண்டல வறண்ட இலையுதிர்க் காடுகள் கானப்படுகின்றன. வெப்பமான, வறண்ட காலததில் நீராவிப்போக்கைக் குறைப்பதற்காக மரங்கள் இலைகளை உதிர்த்து விடுகின்றன.
4.முட்புதர்கள், குட்டையான தாவரங்கள்:
நீண்ட வறண்ட காலத்துடன் கூடிய 1000மில்லி மீட்டர்க்கும் குறைவான மழைப்பொழிவுள்ள பகுதிகளில் முட்புதர்களும், குட்டையான தாவரங்களும் உள்ளன.
5.மாங்குரோவ் காடுகள்:
கிழக்குக் கடற்கரையில் குறிப்பாக வேதாரண்யம் மற்றும் பிச்சாவரம் ஆகிய பகுதிகளில்
மாங்குரோவ் காடுகள் காணப்படுகின்றன.
தமிழ்நாட்டிலுள்ள காடுகளின
் பரப்பில் சுமார் 60% நீலகிரி மாவட்டத்திலும், சுமார்
20% சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் காணப்படுகின்றன.
தர்மபுரி, சேலம், வேலூர் மாவட்டங்களில் சந்தனமரங்கள் முக்கியமாக உள்ளன. கட்டுமான
மரங்கள் கோயம்புததூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கிடைக்கின்றன.
கன்னியகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்கலும் காணப்படுகின்றன. நீலகிரி
மாவட்டத்தில் கற்பூர தைல மரங்கள் செறிந்துள்ளன.
மேற்க்குத் தொடர்ச்சி மலைகளின் கீழ்ச் சரிவுகளில் குறிபபாக விருதுநகர் மற்றும்
திருநெல்வேலி மாவட்டங்களில் தீக்குச்சி தயாரிப்பதற்கான மரங்கள் வளர்கின்றன.
தமிழ்நாட்டில் சுமார் 21, 700 சதுர கிலோ மீட்டர் பரப்பில் காடுகள் உள்ளன. இது
தமிழ்நாட்டின் மொத்த பரப்பின் சுமார் 18% ஆகும்.வனவிலங்கு
மலைகளும், காடுகளும் நிறைந்துள்ள தமிழ்நாடு வனவிலங்குகளுக்கு நீண்ட காலமாக பெயர்
பெற்றது. யானை, சிங்கம், எருமை, கரடி, மான், குரங்கு, குள்ளநரி, சிறுத்தை போன்ற
விலங்குகள் காடுகளில் உள்ளன. வெப்ப மண்டலக் காடுகளில் பலவிதமான பாம்புகள்
காணப்படுகின்றன. ஆறுகளில் முதலைகள் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள்,
வடமேற்கிலுள்ள மலைப்பகுதிகள் தமிழ்நாடு குன்றுப் பகுதிகள் ஆகியவற்றில் பலவகையான
வனவிலங்குகள் உள்ளன. முதுமலை, முண்டந்துறை, ஆனை மலை, வேடந்தாங்கல், கோடிக்கரை
முதலிய சரணளயங்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுப்பதுடன், நல்ல வருமானத்தையும்
பெற்றுத் தருகின்றன.தமிழ்நாட்டிலுள்ள சாரணாலயங்கள்
| இடம் | பரப்பு(ஹெக்டேர்) | வருடம் |
| முண்டந்துறை (திருநெல்வேலி) | 56, 736 | 1962 |
| கோடிக்கரை (நாகப்பட்டிணம்) | 1, 726 | 1967 |
| களக்காடு (திருநெல்வேலி) | 22, 358 | 1976 |
| வல்லநாடு வெளிமான் (தூத்துக்குடி) | 1, 641 | 1987 |
| மலை அணில் (விருதுநகர்) | 48, 520 | 1988 |
தமிழ்நாட்டிலுள்ள தேசிய பூங்காக்கள்
| இடம் | பரப்பு(ஹெக்டேர்) | வருடம் |
| முதுமலை (நீலகிரி) | 10, 324 | 1940 |
| கிண்டி (சென்னை) | 282 | 1976 |
| மன்னார் வலைகுடா (இராமநாதபுரம்) | 623 | 1980 |
| இந்திராகாந்தி பூங்கா (கோயம்ப்த்தூர்) | 11, 711 | 1976 |
| முக்குருத்தி (நீலகிரி) | 7, 846 | 1990 |
தமிழ்நாட்டிலுள்ள பறவைகள் சரணாலயம்
| இடம் | பரப்பு(ஹெக்டேர்) | வருடம் |
| வேடந்தாங்கல் (காஞ்சிபுரம்) | 30 | 1962 |
| வேட்டங்குடி (சிவகங்கை) | 38 | 1977 |
| கரிக்கிலி (காஞ்சிபுரம்) | 61 | 1989 |
| புலிகாட் ( திருவள்ளூர்) | 15, 367 | 1980 |
| காஞ்சிராங்குளம் (இராமநாதபுரம்) | 104 | 1989 |
| சித்ராங்குடி (இராமநாதபுரம்) | 48 | 1989 |
| உதய மார்த்தாண்டம் (திருவாரூர்) | 45 | 1991 |
| வடுவூர் (திருவாரூர்) | 128 | 1991 |
| கூத்தங்குளம் (திருநெல்வேலி) | 129 | 1994 |
| கரைவெட்டி (பெரம்பலூர்) | 280 | 1997 |
| வெல்லோடி (ஈரோடு) | 77 | 1997 |
| மேல்செவ்வனூர், கீழ்செவ்வனூர் (இராமநாதபுரம்) | 593 | 1998 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழக வனவளம் - Tamilnadu Forests - தமிழக சிறப்புக் கூறுகள் - Tamilnadu Highlights - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - காடுகள், வெப்ப, தமிழக, மண்டல, tamilnadu, மரங்கள், நீலகிரி, இராமநாதபுரம், காணப்படுகின்றன, வறண்ட, தமிழ்நாட்டிலுள்ள, வனவளம், சிறப்புக், கூறுகள், சுமார், திருநெல்வேலி, மீட்டர், பகுதிகளில், இடம், மாவட்டங்களில், மலைகளின், பரப்பு, ஹெக்டேர், ஈரமிக்க, தகவல்கள், வருடம், தொடர்ச்சி, தமிழ்நாட்டுத், காஞ்சிபுரம், | , விருதுநகர், திருவாரூர், மலைப்பகுதிகள், வேடந்தாங்கல், கோடிக்கரை, முண்டந்துறை, முதுமலை, காடுகளில், மாவட்டத்தில், தமிழ்நாடு, மில்லி, தமிழ்நாட்டின், உள்ள, மேற்குத், கூடிய, information, forests, highlights, பசுமையிலைக், ஈரமான, நீண்ட, மாங்குரோவ், பரப்பில், குட்டையான, மழைப், இலையுதிர்க், குறைவதாலும், சேலம்