திருமந்திரம் - ஆறாம் நூற்றாண்டு
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்
சிவஞானம் பெற்றுப் பிறவியை நீக்குவதற்கு உடம்பைப் பேணுவது இன்றியமையாதது என்று வற்புறுத்துகிறார் திருமூலர்.
| உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே |
உடம்பு என்பது இழிவானதன்று. அது இறைவனுக்கு உரிய திருக்கோயில் என்பார் அவர்.
ஆசை அறுமின்
ஆசையே துன்பத்திற்கு அடிப்படை என்பர். ஆசை அற்றால் அனைத்துத் துன்பங்களும் அழிந்துபோகும். எஞ்சி நிற்பது பேரானந்தமே.
| ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்தம் ஆமே! |
ஒன்றே குலம் ஒருவனே கடவுள்
தமிழர் என்றும் எண்ணிப் பெருமைப்படத்தக்க பொதுமைத் தத்துவத்தை வழங்கியவர் திருமூலர். சாதி, மதம், நாடு, மொழி என்று பல தடைச் சுவர்களால் சிதறிக்கிடக்கும் மனித குலத்தை நோக்கி,
| ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமன் இல்லை |
என முழங்கினார்.
என்றும் நெஞ்சில் நிறுத்தி வாழ்வில் பின்பற்றத்தக்க உயர்ந்த நெறிகள் பலவற்றை உள்ளடக்கியது திருமந்திரம் என்று குறிப்பிட்டோம். சில பகுதிகள் வருமாறு:-
| யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் (85) ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின் (250) உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம் (1823) |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமந்திரம் - Thirumanthiram - ஆறாம் நூற்றாண்டு - 6th Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திருமந்திரம், ஆறாம், நூற்றாண்டு, அறுமின்கள், உடம்பை, வளர்த்தேன், தமிழ்நாட்டுத், தகவல்கள், தமிழ், நூல்கள், இலக்கிய, thirumanthiram, அவர், | , ஒன்றே, உடம்பு, ஒருவனே, என்றும், century, list, literatures, tamilnadu, information, உயிர், tamil, திருமூலர்