அலை ஒசை - 1.23. இது என்ன ஓசை?
"ஏன் அம்மா! என் கலியாணம் நிச்சயமாகிவிட்ட மாதிரியே பேசுகிறாயே?" என்றாள்லலிதா. "அதிலே கூடச் சந்தேகமா என்ன?" என்றாள் சரஸ்வதி அம்மாள். "அதுதான் மாமி,நானும் சொல்லுகிறேன்! மதராஸிலிருந்து வருகிறவர்கள் வெறுமனே ஜம்பத்துக்காக வருவார்களா? அல்லது நம்ம லலிதாவைப் பார்த்துவிட்டு யாராவது 'பிடிக்கவில்லை' என்றுதான்சொல்வார்களா? அப்படிச் சொல்கிறவர்களுக்குத் தலையில் கொம்பாமுளைத்திருக்கும்? லலிதா மாதிரி பெண் கிடைப்பதற்குப் பூர்வ ஜன்மத்திலே புண்ணியம் செய்திருக்க வேண்டாமா!" என்றுசீதா கூறியதும் சரஸ்வதி அம்மாளைப் பூரிக்கச் செய்தது. "வருகிறவர்கள் சொல்கிறதுஇருக்கட்டும். நான் 'மாப்பிள்ளை பிடிக்கவில்லை' என்று சொல்லிவிட்டால்?" என்றாள் லலிதா."அசடே! பேசாமலிரு, யார் காதிலாவது விழப் போகிறது! சூரியா பேத்துகிறதைக் கேட்டுக் கொண்டு ஏதாவது உளறாதே!" என்று சரஸ்வதி அம்மாள் கோபமாய்ச் சொன்னாள். "நானும் அதுதான் இவளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன், மாமி! பார்க்கிறதுக்கு முன்னாலேயே'பிடிக்காமலிருக்கும்' என்று எதற்காக நினைத்துக்கொள்ள வேண்டும்! மாமாவோ நேரில் பார்த்து விட்டு வந்து 'மாப்பிள்ளை மன்மதன் மாதிரி இருக்கிறார்!' என்று சொல்லுகிறார். மன்மதனைவிடஅழகாய் எங்கே போய் மாப்பிள்ளை பிடிக்கிறது. மாமி! இந்த விஷயத்திலே மட்டும் லலிதாகொஞ்சம் அசட்டு பிசட்டு என்று பேசிக்கொண்டிருக்கிறாள்; அது எனக்குப் பிடிக்கவே இல்லை. இவள் அண்ணாவின் துர்போதனைதான் காரணம் போலிருக்கிறது!" என்றாள் சீதா.
"கேட்டாயா, லலிதா உன் அத்தங்காள் சொல்கிறதைக் கேட்டுக்கொள். சூரியாஏதாவது உளறினால் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாதே! அவனுக்கு இந்த விஷயமெல்லாம் என்ன தெரியும். யாரோ அவனுக்குத் தூபம் போட்டு விட்டிருக்கிறார்கள்!சீதாதான் நல்லமாதிரி யோசனை சொல்கிறாள். அவளுடைய புத்திமதியைக் கேட்டுக்கொள்!"என்றாள் சரஸ்வதி அம்மாள். லலிதாவை அலங்காரம் செய்ய ஆரம்பித்த சிறிது நேரத்துக்கெல்லாம் பம்பாய் ராஜம்மாள் சூரியாவைக் கூப்பிட்டு அனுப்பி "அப்பா! நான் பிறந்து வளர்ந்தஊரைச் சுற்றிப் பார்க்க வேணுமென்று ஆசையாயிருக்கிறது. குளத்தங் கரையில் அண்ணா பங்களாக் கட்டியிருக்கிறானாமே! அங்கே போய்ச் சற்று நேரம் காற்று வாங்கிவிட்டு வரலாமா?"என்றாள். "ஆகட்டும் அத்தை, போகலாம்" என்றான் சூரியா. இருவரும் பங்களாவைஅடைந்தார்கள். ராஜம்மாள் பங்களாவின் திறந்த ஜன்னல் வழியாக நெடு நேரம் குளத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். "எனக்குக் குளத்தில் இறங்கிக் குளிப்பதற்கு ரொம்பப் பிரியம். வினாத் தெரிந்த நாளிலிருந்து கலியாணம் ஆகும்வரையில் ஒரு நாள்கூட இந்தக் குளத்தில் குளிக்காமல் இருந்தது கிடையாது. பம்பாய்க்குப் போனதிலிருந்து "குழாய் ஜலந்தான் 'கங்கைகாவேரி' என்று ஆகிவிட்டது" என்று சொல்லி ராஜம் பெருமூச்சு விட்டாள்.
"அத்தை! உங்களுக்கு நீந்தத் தெரியுமாமே? அது உண்மையா? பெரிய அத்தைசொன்னாள்" என்றான் சூரிய நாராயணன். "உண்மைதான் சூரியா! அப்பா எனக்கு நீந்தக் கற்றுக்கொடுத்தார். நான் குழந்தையாயிருந்தபோது ஒரு நாள் யரோ ஒரு ஸ்திரீ காவேரி வெள்ளத்தில்போய்விட்டாள், என்று செய்தி வந்தது. அதுமுதல் 'பெண்களுக்கும் கட்டாயம் நீந்தத்தெரியவேண்டும்' என்று சொல்லி அப்பா, அதாவது உன் தாத்தா எனக்கு நீந்தக் கற்றுக்கொடுத்தார். இந்தக் குளத்தில் இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திப் போய்விடுவேன். சிலசமயம் காவேரியில்கூட நீந்தியிருக்கிறேன். புண்ணிய காலங்களிலும் பண்டிகை தினங்களிலும்வண்டி கட்டிக்கொண்டு எல்லோரும் காவேரிக்குக் குளிக்கப் போவோம். அப்பா, அண்ணா,அக்கா எல்லோருமாகப் போவோம். நான்தான் வீட்டுக்குக் கடைக்குட்டிப் பெண். எல்லாருக்கும்என் பேரில் ஆசை அதிகம்...." ராஜம்மாள் கண்ணைத் துடைத்துக்கொண்டு, "அந்தப் பழங்கதையெல்லாம் இப்போது எதற்கு? என்னமோ உளறினேன். இருக்கட்டும், சூரியா! நீ இந்த வருஷம் மெட்ரிகுலேஷன் பரீட்சைக்குப் படிக்கிறாயாமே? அப்படித்தானா?" என்றாள். ராஜம்மாளின் கண்ணில் கண்ணீர் ததும்புவதைப் பார்த்துச் சூரியாவும் பேச்சை மாற்ற விரும்பினான். "ஆமாம், அத்தை! முன்னேயெல்லாம் மெட்ரிகுலேஷன் என்பார்கள். இப்போதுஎஸ்.எஸ்.எல்.சி என்று அதற்குப் பெயர். எங்க அம்மாவுக்குப் பத்தாவது என்று சொன்னால்தான்தெரியும்!" என்றான்.
"ஆமாம், சூரியா! நீ ஒரு வக்கீல் வீட்டில் ஜாகை வைத்துக் கொண்டிருக்கிறாயாம். அந்த வக்கீலுக்கு ஒரு பிள்ளை இருக்கிறானாம்; பி.ஏ. படிக்கிறானாமே - வாஸ்தவந்தானா?" என்று ராஜம்மாள் கேட்டாள். "வாஸ்தவந்தான் அத்தை! அதற்கு என்ன இப்போது?" என்று சூரியாகேட்டபோதே அவன் மனத்தில் அந்தக் கேள்விக்குப் பதிலும் உதித்தது? வக்கீலின்பிள்ளைக்குச் சீதாவைக் கொடுக்கலாம் என்பதற்குத்தான் அத்தை அவனைப் பற்றிக் கேட்கிறாள்என்று தெரிந்துவிட்டது. அந்த எண்ணம் ஊசியால் குத்துவது போல் சுரீர் என்ற வேதனையைஅவனுக்கு உண்டாக்கியது. "சூரியா! உன் அத்திம்பேர் ஒரு மாதிரி மனுஷர் என்றுகேட்டிருப்பாய். எனக்கோ உடம்பு சரியாகவே இல்லை. இந்தப் பெண் சீதாவுக்கு ஒருகலியாணத்தைச் செய்து வைத்துவிட வேண்டுமென்று கவலையாயிருக்கிறது அண்ணாவிடம்சொல்லித்தான் இருக்கிறேன். ஆனால் அவனுக்கு எத்தனையோ ஜோலி. யாராவது நல்ல வரனாகத் தெரிந்தால் பார்த்துச் சொல், சூரியா! அதற்காகத்தான் முக்கியமாக உன்னிடம்தனியாகப் பேசவேண்டும் என்று சொன்னேன்."
"அத்தை! இது என்ன பிரமாதம்? சீதாவின் சமர்த்துக்கும் அழகுக்கும் வரன்கள் நான், நீஎன்று போட்டி போட்டுக் கொண்டு வரமாட்டார்களா? அதைப் பற்றி உங்களுக்குக் கவலையேவேண்டாம்!" என்று சூரியா கூறினான். அதே சமயத்தில் தன்னுடைய மனத்திற்குள் "நான்ஒருவன் இருக்கிறேனே? வேறு வரனைத் தேடுவானேன்?" என்று சொல்லிக்கொண்டான். இதைவெளிப்படையாக அத்தையிடம் சொல்லிவிடலாமா என்றுகூட மனத்தில் நினைத்தான், ஆனால்சங்கோசம் குறுக்கிட்டது. "சீதா சமர்த்து என்று உனக்குத் தோன்றுகிறதா, சூரியா! எதிலிருந்துஅவ்வாறு சொல்கிறாய்? வயது பதினாறு பிறந்திருக்கிறது; இன்னும் விளையாட்டுத்தனம்கொஞ்சம்கூடப் போகவில்லை. ஓடையில் விழுந்ததும் 'ஓகோ' என்று கூச்சல் போட்டாளே, பார்த்தாயல்லவா?" என்றாள் ராஜம்மாள். "அதனால் என்ன அத்தை, சிறு பிராயத்தில் பெண்கள்அப்படிச் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தால்தானே நன்றாயிருக்கிறது?அழுமூஞ்சியாயிருந்தால் யாருக்குப் பிடிக்கும்? பம்பாய்க்குப் போய் வந்த பிறகு லலிதாவின்சுபாவம்கூட மாறியிருக்கிறது. அதற்கு முன்னாலெல்லாம் அம்மாவுடன் சண்டை பிடிப்பதும்அழுவதுமாகவே இருப்பாள்; கலகலப்பாகவே இருக்கமாட்டாள். இந்த ஒரு வருஷமாகச் சிரித்து விளையாடிக் கொண்டு சந்தோஷமாயிருக்கிறாள்" என்றான் சூரியா.
"இந்த அசட்டுப் பெண் உன் தங்கையையும் தன்னைப் போல் ஓயாமல் சிரித்துக்கொண்டிருக்கும்படி செய்து விட்டாளாக்கும்." "அடிக்கடி சீதாவை 'அசடு அசடு' என்றுசொல்கிறீர்களே அத்தை! அவள் முகத்திலே சமர்த்து என்று எழுதி ஒட்டியிருக்கிறதே! எது வரையில் படித்திருக்கிறாள்?" "படிக்கிறதிலே சீதா சமர்த்துத்தான் சூரியா. பள்ளிக்கூடத்தில்எப்போதும் முதல் மார்க்குத்தான். ஒரு தடவை காதால் கேட்ட பாட்டை அப்படியே பாடி விடுவாள், இந்தப் பக்கங்களில் எட்டாவது என்று சொல்லுகிறார்களே அதுவரையில் படித்திருக்கிறாள். இங்கிலீஷ் நன்றாகத் தெரியும், கதை சொல்லச் சொன்னால் இன்றைக்கெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் உலகந் தெரியாதபெண்ணாயிருக்கிறாள். யாரிடமும் எப்படி நடந்து கொள்வது என்று தெரியவில்லை. இந்த வருஷம் லலிதாவின் கல்யாணத்தோடு சேர்த்துச் சீதாவுக்கும் நடத்திவிட்டால் என் மனத்துக்குநிம்மதியாயிருக்கும். மேற்படி சம்பாஷணையின் நடுவில் சூரியாவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.அதாவது அத்தைக்குச் சீதாவைத் தனக்குக் கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் போலிருக்கிற து; அதை மனத்தில் வைத்துக் கொண்டுதான் வரனைப் பற்றிய பேச்சை எடுத்திருக்கிறாள் என்றுநினைத்தான். ஆனாலும் தன்னுடைய கௌரவத்தை விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்றுஎண்ணினான். அத்தை அந்த விஷயத்தைப் பற்றிப் பட்டவர்த்தனமாகக் கேட்ட பிறகு கொஞ்சம்'பிகு' பண்ணிக் கொண்டு அரை மனதாகத் தன்னுடைய சம்மதத்தைத் தெரியப்படுத்துவது என்றுதீர்மானித்தான்.
எனவே, சிறிது அலட்சிய பாவத்துடன், "இங்கே என்ன அப்படி ஒசத்தியான வரன்கிடைத்துவிடப் போகிறது. அத்தை! பம்பாயில் இல்லாத வரனா? அங்கேயே பார்க்கக் கூடாதா?" என்றான். "பம்பாயில் வரன் இருக்கலாம், சூரியா! ஆனால் சீதாவை இந்தப் பக்கத்தில் கொடுக்க வேண்டும் என்பது என் எண்ணம், நம்முடைய குடும்பத்தில் நான் ஒருத்தி பம்பாயில் வாழ்க்கைப் பட்டது போதும் என்று இருக்கிறது. மறுபடியும் நீ தேவபட்டணத்துக்குத்திரும்பிப் போனதும் அந்த வக்கீலாத்துப் பையனின் ஜாதகம் வாங்கி அனுப்புகிறாயா, சூரியா?அந்தப் பையன் பெயர் என்ன?" "அவன் பெயர் பட்டாபிராமன், அத்தை! பையன்கெட்டிக்காரன்தான்; பி.ஏ. படிக்கிறான். ஆனால் சொத்து அதிகம் கிடையாது. ஒரு வீடுஇருக்கிறது; அதன் பேரில் கடன். இந்த இலட்சணத்துக்கு ஏராளமான வரதட்சணை வரவேண்டும் என்று அவன் அப்பாவும் அம்மாவும் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பட்டாபியைவிடச் சிலாக்கியமான வரன்கள் இருக்கின்றன; நான் பார்த்துச் சொல்கிறேன்.நீங்கள் அவசரப்பட வேண்டாம்" என்றான் சூரியா. "எவ்வளவோ பெரிய வரன்கள் இருக்கலாம்!ஆனால் நமக்குச் சரியாக வரவேண்டாமா, சூரியா? இந்த நாளில் பிள்ளைகளைப் பெற்றவர்கள்எல்லாரும் கண்ணை மூடிக் கொண்டுதான் வரதட்சணை கேட்கிறார்கள். நாளைக்கு உனக்குத்தான் கலியாணப் பேச்சு வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அண்ணாவும்மன்னியும் பத்தாயிரம் ரூபாய்க்குக் குறைந்து வரதட்சணை வாங்குவார்களா?..."
வரதட்சணை வாங்குவதைப் பற்றி ஒரு பெரிய கண்டனப் பிரசங்கம் செய்யவேண்டுமென்று சூரியா எண்ணினான். கலியாண விஷயத்தில் தன்னுடைய தீர்மானமானகொள்கையை வெளியிடவும் உத்தேசித்தான். ஆனால் அதற்குள் அத்தையின் முகபாவம்மாறுவதைக் கவனித்தான். ராஜம்மாளின் முகத்தில் பீதியின் அறிகுறி தோன்றியது. "சூரியா! இதுஎன்ன ஓசை!" என்று கேட்டாள். ஓசையா? என்ன ஓசை? எனக்கு ஓசை ஒன்றும்கேட்கவில்லையே?" என்றான் சூரியா. "கவனித்துக் கேள், சூரியா! சமுத்திரத்தில் அலை ஓசை மாதிரிச் சத்தம் கேட்கவில்லையா?" சூரியாவின் காதிலும் அப்போது அந்த ஓசை கேட்டது. பங்களாவுக்கு வெளியில் எட்டிப் பார்த்தான். சற்றுத் தூரத்தில் ஒரு விஸ்தாரமான சவுக்கு மரத்தோப்பு காணப்பட்டது. இளவேனிற் காலத்தின் இனிய தென்றல் அந்தத் தோப்பில் பிரவேசித்துநெருங்கிய சவுக்கு மரக்கிளைகளின் வழியாக நுழைந்து சென்றபோது உண்டான சத்தந்தான்அப்படிச் சமுத்திரத்தின் அலை ஓசை போன்ற பிரமையை உண்டாக்கியது! இதைத் தெரிந்துகொண்ட சூரியா, "அத்தை! அலையும் இல்லை; ஓசையும் இல்லை! அதோ அந்தச் சவுக்குத்தோப்பின் கிளைகள் காற்றில் அசைவதுதான் அலை ஓசை போன்ற சத்தத்தை உண்டாக்குகிறது." அது உண்மையென்று தெரிந்து கொண்ட பிற்பாடு ராஜம்மாளின் முகம் சிறிது தெளிவடைந்தது. "இருந்தாலும் அத்தை! நீ என்னத்திற்காக அவ்வளவு பயங்கரமடைந்தாய்? அலைஓசையாயிருந்தால்தான் என்ன?" என்று சூரியா கேட்டான். "என் மனது இப்போது ரொம்பவும்கலங்கிப் போயிருக்கிறது. இன்னொரு சமயம் சொல்கிறேன்!" என்றாள் ராஜம்மாள். சற்றுத் தூரத்திலிருந்து 'பாம்' 'பாம்' என்று மோட்டார்க் கொம்பின் சத்தம் கேட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலை ஒசை - 1.23. இது என்ன ஓசை? , ", சூரியா, அத்தை, என்ன, வேண்டும், என்றாள், சரஸ்வதி, என்றான், ராஜம்மாள், நான், அந்த, சீதா, சிறிது, வரதட்சணை, இல்லை, அப்பா, தன்னுடைய, கொண்டு, பெண், மாதிரி, எண்ணம், அவன், மனத்தில், இந்தப், மாப்பிள்ளை, லலிதாவை, பெரிய, எனக்கு, ராஜம்மாளின், இப்போது, பார்த்துச், குளத்தில், அவள், வரன்கள், பெயர், வைத்துக், லலிதா, விஷயத்தில், அம்மாள், மாமி, பம்பாயில், போட்டுக், ஆமாம், சத்தம், சொல்கிறேன், இருக்கலாம், பேச்சை, சற்றுத், பாம்&, அந்தப், வருஷம், மெட்ரிகுலேஷன், கொண்டுதான், சவுக்கு, கேட்டது, கொடுக்க, உண்டாக்கியது, போல், சிரித்து, சமர்த்து, செய்து, அதிகம், விளையாடிக், பிறகு, தோன்றியது, பற்றி, அதற்கு, கேட்ட, சீதாவை, படித்திருக்கிறாள், கேட்டாள், இந்தக், கல்கியின், நாள், ரொம்ப, சொன்னால், காதிலும், சொல்லிக், அதுதான், அலங்காரம், கலியாணம், என்னமோ, செய்யலாம், இரண்டு, இப்படி, செய்ய, தலையில், பிரசங்கம், பார்த்து, வரனைப், சீதாவுக்கும், நானும், வருகிறவர்கள், பம்பாய்க்குப், கிடையாது, வழியாக, நேரம், சொல்லி, நீந்தக், போவோம், அதாவது, கற்றுக்கொடுத்தார், அண்ணா, தெரியும், போகிறது, பிடிக்கவில்லை&, யாராவது, அமரர், கேட்டுக், அவனுக்கு, கேட்டுக்கொள், போய், பேரில்