வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 227
மாகாணத்திற்காக இவ்வளவு பெரிய சண்டை போடுவானா என்பது சந்தேகமே. இதையெல்லாம் நினைக்கும்போது, எனக்கொரு சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது. எனது பிரயாணப் பாதையிலே ஒரு சிறிய கிராமம். அதிலே நாற்பது வீடுகள் இருந்தன. ஒரு வீட்டிலே திடீரென்று நெருப்புப் பிடித்துக் கொண்டது உடனே மற்ற வீட்டுக்காரர்களெல்லாம் பெரிய பெரிய பாத்திரயங்களிலே தண்ணீரை நிரப்பினார்கள். ஆனால் அந்த நெருப்பை அணைப்பதற்கல்ல; தங்கள் வீடுகளைக் காப்பதற்கு என்று கருதி - தண்ணீர்ப் பாத்திரங்களோடு தங்கள் தங்கள் வீடுகளின் முன்னால் உட்கார்ந்து கொண்டார்கள். அதிர்ஷ்டவசமாகக் காற்றுவேறு பக்கம் திரும்பிவிட்டது. இல்லாவிடில், அந்தக் கிராமத்திலே ஒரு வீடுகூடத் தப்பியிருக்க முடியாது. இதைப் பார்த்த பொழுது கிராமத்திலுள்ள எல்லா வீடுகளும் தங்கள் வீடுகளே என்றும், எல்லோருடைய சுகதுக்கங்களும் தங்களுடையதே என்றும் கருதி, ஐக்கியத்தோடு வாழ்ந்த ஜன ஆட்சிகள் ஞாபகத்திற்கு வந்தன. இன்றும்கூட சமுத்திர குப்தன், சந்திரகுப்தன், குமார குப்தன் இவர்களுடைய வெற்றிப் பெருக்கிற்காக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரைக் கொடுக்கிறார்கள். அடிமைகளைப்போல் எஜமானர்களுக்குக் கீழ்ப்படிந்து, ஆனால் சுதந்திரம் உள்ள மனிதர்களைப்போல, மனித உணர்ச்சியில் ஒன்றுபட்டுத் தங்கள் நலனைத் தேடிக்கொள்ள அவர்களால் முடியவில்லை. நூறு வருட காலத்திற்குள் மனிதர்களுடைய மனப்பான்மையில்தான் எத்தனை பெரிய மாற்றம்? இந்த குப்த ஆட்சி, இன்னும் நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு நடந்துகொண்டிருக்குமானால், இந்த நாடு தங்கள் அரசர்களுக்காகப் போராடி மடியும் சுய உணர்ச்சியற்ற அடிமைகள் நிறைந்த தேசமாக ஆகிவிடும். மனிதர்களுக்குச் சில உரிமைகளும் இருக்கிறது;
மனிதத்தன்மை என்ற ஒரு பண்பும் உண்டு என்பதையே இந்த ஜனங்கள் மறந்து விடுவார்கள்.
அஜந்தா மடம் மிக மிகப் பெரியதாயும் அழகாயும் இருந்தது. ஒரு பெரிய மலையை, அர்த்த சந்திர வடிவமாக ஒரு நதி அறுத்து ஓடிக்கொண்டி
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 227, தங்கள், பெரிய, புத்தகங்கள், பக்கம், வால்காவிலிருந்து, கங்கை, ஞாபகத்திற்கு, கருதி, என்றும், குப்தன், விடுவார்கள், சிறந்த, அவர்களின், சிறிய, சண்டை, குமார