சத்ய சோதனை - பக்கம் 78
ஆனால், நான் தீங்குறாமல் எங்குமே தப்பிவிட முடியாது. ஏனெனில், புரையோடும் பொய்ம்மைப் புண்ணிலிருந்து என்னைக் காக்க கடவுள் திருவுளம் கொண்டார். வெண்ட்னரைப் போல நீர் நிலையத்தை அடுத்த மற்றோர் ஊரான பிரைட்டனுக்குப் போயிருந்தேன். அது நான் வெண்ட்னருக்குப் போவதற்கு முன்னால், அங்கே ஒரு ஹோட்டலில் சாதாரண வசதிகளுடைய ஒரு கிழ விதவையைச் சந்தித்தேன். என் இங்கிலாந்து வாசத்தின் முதலாண்டில் நடந்தது இது. ஹோட்டலில் சாப்பாட்டுக்குப் பரிமாற இருக்கும் உணவு வகைகளைக் குறிக்கும் பட்டியல் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டிருந்ததால் எனக்குப் புரியவில்லை. அக்கிழவி உட்கார்ந்திருந்த மேஜையிலேயே நானும் உட்கார்ந்திருந்தேன். நான் அந்த இடத்திற்குப் புதியவன், ஆகையால் விழிக்கிறேன் என்பதை அம்மூதாட்டி கண்டு கொண்டார். எனக்கு உதவி செய்யவும் முன் வந்தார். “ நீர் இவ்விடத்திற்குப் புதியவர் என்று தோன்றுகிறது. இன்னது வேண்டும் என்று ஏன் கேட்காமல்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 78, நான், புத்தகங்கள், கீழே, பக்கம், என்னை, சோதனை, சத்ய, சிரித்தாள், இறங்கி, கொண்டார், ஹோட்டலில், நீர், அவள், சமயம், மகள், அம்மாளின், அழைத்துச், வேகமாக, போனாள், சிறந்த