சத்ய சோதனை - பக்கம் 226
இவ்வாறு சம பலம் இல்லாத இரு கட்சியினரின் போர்க்களமாக டர்பன் ஆயிற்று. ஒருபக்கத்தில் ஒரு சிலரேயான ஏழை இந்தியரும் அவர்களுடைய ஆங்கில நண்பர்கள் சிலரும்; மற்றொரு பக்கத்திலோ, ஆயுதங்களிலும் எண்ணிக்கையிலும், படிப்பிலும், செல்வத்திலும் பலம் படைத்திருந்த வெள்ளையர்கள்! நேட்டால் அரசாங்கமும் அவர்களுக்குப் பகிரங்கமாக உதவி செய்து வந்ததால், அரசாங்கத்தின் பக்க பலமும் அவர்களுக்கு இருந்தது. மந்திரி சபையில் அதிகச் செல்வாக்கு வாய்ந்த அங்கத்தினராயிருந்த ஸ்ரீ ஹாரி எஸ்கோம்பு, வெள்ளையரின் பொதுக்கூட்டங்களில் பகிரங்கமாகக் கலந்து கொண்டார்.
கப்பல் பிரயாணிகளை அல்லது கப்பல் ஏஜெண்டுகளான கம்பெனியை எப்படியாவது மிரட்டி, பிரயாணிகள் இந்தியாவுக்குத் திரும்பிப் போய்விடுமாறு பலவந்தப்படுத்திவிட வேண்டும் என்பதே, கப்பல் கரைக்கு வராமல் நிறுத்தி வைத்ததன் உண்மையான நோக்கம். இப்பொழுது எங்களை நோக்கியும் மிரட்டல்களை ஆரம்பித்து விட்டார்கள். ‘திரும்பிப் போய்விடாவிட்டால் நீங்கள் நிச்சயம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 226, புத்தகங்கள், அவர், ஸ்ரீ, பக்கம், அப்துல்லா, தாதா, சத்ய, கப்பல், சோதனை, கொண்டிருந்தார், இந்திய, பலம், அவர்களுக்கு, உண்மையான, வந்தார், அச்சமயம், எங்களுக்கு, கம்பெனியார், சிறந்த, வந்தனர், கம்பெனியை, இருந்தார், கம்பெனியின், கூறி, பிரயாணிகளை