மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு

விடியல்காலத்தில் மதுரை மாநகர்
				| போதுபிணி விட்ட கமழ்நறும் பொய்கைத் தாதுண் தும்பி போது முரன்றாங்  | 
    655 | 
| கோத லந்தணர் வேதம் பாடச் சீரினிது கொண்டு நரம்பினி தியக்கி யாழோர் மருதம் பண்ணக் காழோர் கடுங்களிறு கவளங் கைப்ப நெடுந்தேர்ப் பணைநிலைப் புரவி புல்லுணாத் தெவிட்டப்  | 
    660 | 
| பல்வேறு பண்ணியக் கடைமெழுக் குறுப்பக் கள்ளோர் களிதொடை நுவல இல்லோர் நயந்த காதலர் கவவுப்பிணித் துஞ்சிப் புலர்ந்துவிரி விடிய லெய்த விரும்பிக் கண்பொரா வெறிக்கு மின்னுக்கொடி புரைய  | 
    665 | 
| ஒண்பொ னவிரிழை தெழிப்ப இயலித் திண்சுவர் நல்லிற் கதவங் கரைய உண்டுமகிழ் தட்ட மழலை நாவிற் பழஞ்செருக் காளர் தழங்குகுரல் தோன்றச் சூதர் வாழ்ந்த மாகதர் நுவல  | 
    670 | 
| வேதா ளிகரொடு நாழிகை இசைப்ப இமிழ்முர சிரங்க ஏறுமாறு சிலைப்பப் பொறிமயிர் வாரணம் வைகறை இயம்ப யானையங் குருகின் சேவலொடு காமர் அன்னங் கரைய அணிமயில் அகவப்  | 
    675 | 
| பிடிபுணர் பெருங்களிறு முழங்க முழுவலிக்  கூட்டுறை வயமாப் புலியொடு குழும வான நீங்கிய நீனிற விசும்பின் மின்னுநிமிர்ந் தனைய ராகி நறவுமகிழ்ந்து மாணிழை மகளிர் புலந்தனர் பரிந்த  | 
    680 | 
| பரூஉக்கா ழாரஞ் சொரிந்த முத்தமொடு பொன்சுடு நெருப்பி னிலமுக் கென்ன அம்மென் குரும்பைக் காய்படுபு பிறவுந் தருமணன் முற்றத் தரிஞிமி றார்ப்ப மென்பூஞ் செம்மலொடு நன்கலஞ் சீப்ப  | 
    685 | 
| இரவுத்தலைப் பெயரு மேம வைகறை | 
அந்தணர் வேதம் பாடினர். யாழோர் மருதம் பாடினர். காழோர் யானைகளுக்கு கவளம் ஊட்டினர். தேர்க் குதிரைகளுக்குப் புல்லுணவு போட்டனர். பண்ணியம் விற்போர் கடையை மெழுகினர். கள்ளை விலை கூறி விற்றனர். காதலர் கட்டியணைத்தபடி தூங்கிக் கொண்டிருந்தனர். கதவுகள் திறக்கும் ஓசை கேட்டது. கள்ளுண்டவர்கள தழங்கு குரலில் பேசினர். சூதர் அரசனுக்கு வாழ்த்துப் பாடினர். மாகதர் அரசனின் பழம்புகழை எடுத்துப் பேசினர். வேதாளிகர் காலம் கணித்துச் சொன்னார்கள். அரண்மனை முரசு முழங்கிற்று. அதன் எதிரொலியாக யானை முழங்கிற்று. சேவல் கூவிற்று ஆண், பெண் குருகுகள் யானை போல் கரைந்தன. அன்னங்கள் ஆசைகொண்டு கரைந்தன. அணிமயில் அகவிற்று. பிடியோடு உறவு கொள்ளும் பெருங்களிறு முழங்கிற்று. கூட்டில் வளர்க்கப்பட்ட ஆண், பெண் புலிகள் குழுமின. இல்லத்தரசியர் புலவி நிகழ்ந்தது. வண்டுகளின் ஆரவாரம் கேட்டது. முற்றத்தில் பழம்பூக் களைந்து புதுப்பூ வைக்கப்பட்டது. இந்த விடியல் ‘ஏம வைகறை’ ஆயிற்று. உள்விளக்கம் குளத்துப் பூவில் தேன் உண்ணும் தும்பி பாடுவது போல் வேதம் ஓதும் அந்தணர் மூக்கொலியோடு பாடினர். மருதப்பண் ஊடலோடு தொடர்புடையது. யாழ் மீட்டுவதற்கு முன் அதன் நரம்பின் சீரை இனிதாக்கிக் கொண்டு பண்ணிசைப்பர். யானைக்குச் சோற்றுக் கவளத்தை வேண்டா என்று அதற்கு கைத்துப்போகும் அளவுக்கு ஊட்டுவர். குதிரைக்கும் அவ்வாறே புல்லைத் தெவிட்டும் அளவுக்குப் போடுவர். பண்ணியம் என்பது பலசரக்கு என்று முன்பே கூறப்பட்டது. நயந்த காதல் என்பது விரும்ப விரும்ப விருப்பம் கூடிக்கொண்டேயிருக்கும் காதல். கதவு திறக்கும் பெண்கள் மின்னல் போல் ஒளிரும் அணிகலன்களுடன் மெதுவாக வந்தனர். கள்ளுண்டவர் என்று மேலே கூறியதற்குப் பதிலாக பழஞ்சோற்று நீராரம் உண்டவர்கள் என்றும் கூறலாம். புலியின் ஒலியைக் குழுமுதல் என்பது மரபு. வானம் நீங்கிய விசும்பு என்பது மழைமேகம் இல்லாத ஆகாயம். விடியலில் வந்த கணவனோடு ஊடும் மகளிர் நறவு அருந்தி மகிழ்ந்திருந்தனர் போலும். மணல் கொண்டுவந்து பரப்பப்பட்ட முற்றத்தில் முத்தாரத்தின் முத்துக்கள் சிதறிக்கிடந்தன. இது விடியலில் வாசல் பெருக்கும் போது உதிர்ந்தவை என்க. நெருப்பில் நீலமணியை நனைப்பதுபோல் முற்றத்தை அடுத்த குளத்தில் நீலமலர்கள் பூத்துக் கிடந்தன. அல்லது மார்கழி மாதத்தில் முற்றத்தில் பூ வைப்பதுபோல் மணல்முற்றத்தில் பூ வைத்து விருந்தினரை வரவேற்றனர். செம்மல் = பழம்பூக்கள்
மதுரையின் சிறப்பு 
				| மைபடு பெருந்தோள் மழவ ரோட்டி  இடைப்புலத் தொழிந்த ஏந்துகோட் டியானை பகைப்புலங் கவர்ந்த பாய்பரிப் புரவி வேல்கோ லாக ஆள்செல நூறிக்  | 
    690 | 
| காய்சின முன்பிற் கடுங்கட் கூளியர் ஊர்சுடு விளக்கிற் றந்த ஆயமும் நாடுடை நல்லெயில் அணங்குடைத் தோட்டி நாடொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி நாடர வந்த விழுக்கல மனைத்தும்  | 
    695 | 
| கங்கையம் பேரியாறு கடற்படர்ந் தாங்கு அளந்துகடை யறியா வளங்கெழு தாரமொடு புத்தே ளுலகம் கவினிக் காண்வர மிக்குப்புகழ் எய்திய பெரும்பெயர் மதுரைச்  | 
    
புத்தேள் உலகம் அழகானது. எது வேண்டுமானாலும் பெறக்கூடியது. அதுபோல் மதுரை அழகானதாகவும் வேண்டியதெல்லாம் பெறக்கூடியதாகவும் இருந்தது. பலரும் இதனைப் புகழ்ந்ததால் இதனைப் ‘பெரும்பெயர் மதுரை’ எனப் போற்றினர். தாரம் என்பது தரும் பொருள். அளவிடும் எல்லையைக் கடந்து மதுரையில் செல்வ வளம் மண்டிக் கிடந்தது. என்னென்ன தாரங்கள்? பகைவர் நாட்டைச் சுடும்போது அந்த விளக்கு வெளிச்சத்தில் கூளியர் கொண்டுவந்து தந்த பொருள்கள். வேற்று நாட்டவர் தங்களைக் காப்பாற்றும்படி வேண்டிக் கொண்டுவந்து கைதொழுது தந்த பொருள்கள் - ஆகியவை. கூளியர் கொள்ளையிட்டுக் கொண்டுவந்து தந்தது ஆயம். அடுத்த நாட்டவர் வாழ்த்தி வணங்கித் தந்தது விலையுயர்ந்த பொருள்கள். ஔவையார் அதியமானை ‘மழவர் பெருமகன்’ என்கிறார். (புறம் 88) மழவர் படையை ஓடச்செய்து கூளியர் கொண்டுவந்த ஆயம். போர்க்களத்தில் மழவர் விட்டுவிட்டு ஓடிய யானைக்கூட்டம். பகைவரிடம் பறித்துக் கொண்டுவந்த குதிரைக் கூட்டம். இவற்றைக் கொண்டுவந்தவர் கூளியர் இனப் படைவீரர்கள். மழவரை வேல் வீசித் தாக்கி, சினம் கொண்டு அவர்களின் ஊரை எரித்துவிட்டு அந்த எரிவெளிச்சத்தில் தெரிந்த யானைகளையும், குதிரைகளையும் ஓட்டிக்கொண்டு வந்த ஆயத்தாரம்.
‘இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி
அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றில்
பளிங்கு வகுத்து அன்ன தீநீர்
நளிமலை நாடன் நள்ளி’ – புறநானூறு 150
கடையெழு வள்ளல்களில் ஒருவன் தோட்டிமலை நள்ளி. இவன் தன் தோட்டிமலைக் கோட்டையை நெடுஞ்செழியன் அழிக்காமல் இருப்பதற்காக ஒவ்வொரு நாளும் விழுமிய வளங்களைக் கொண்டுவந்து தந்தான். கங்கை ஆறு கடலில் கலப்பது போல இந்த தார வளங்கள் துரையில் வந்து குவிந்தன. இந்தத் தாரச்செல்வங்கள் கங்கையாறு காவிரியில் கலப்பது போல் மதுரையில் வந்து குவிந்தன. கற்பனை உலகமாகிய வானுலகத்தைப் ‘புத்தேள் உலகம்’ என்றும் வழங்கினர். (ஆள் <= ஆள்பவர். ஏ <= ஏராப்பு = உயர்வு. ஏ <= ஏள் = உயர் <= உயர்வு உயர்ந்த இடம், ஒப்பு நோக்குக ஆ – சேய்மைச்சுட்டு (‘ஆயிடை’ – தொல்காப்பியம்) ஆனிலை உலகம். ஆ <= ஆன் (‘ன்’ போலி) \ ஆ = அங்கு – அங்கு நிலைகொண்டுள்ள உலகம் ஆ = ஆன்மா ஆன்மா நிலைகொண்டுள்ள இடம்) ஆன்மா என்றால் என்ன? உனக்கு ஓர் உயிர் எனக்கு ஓர் உயிர். அவனுக்கு ஓர் உயிர். அதற்கு ஓர் உயிர் எல்லாரிடமும் எல்லாவற்றிலும் இணைந்திருக்கும் ஓர் உயிர். எல்லாவற்றிலும் இணைந்திருக்கும் இந்த ஓர் உயிர்தான் ஆன்மா.
			தேடல் தொடர்பான தகவல்கள்:
			
	
  மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு, கொண்டுவந்து, கூளியர், என்பது, பாடினர், போல், இலக்கியங்கள், வந்த, முற்றத்தில், பொருள்கள், முழங்கிற்று, வேதம், பத்துப்பாட்டு, மதுரைக்காஞ்சி, கொண்டு, விடியலில், என்றும், காதல், விரும்ப, மதுரையில், கொண்டுவந்த, மழவர், கலப்பது, வந்து, குவிந்தன, ஆயம், தந்தது, இதனைப், அந்த, தந்த, நாட்டவர், அடுத்த, யானை, நயந்த, காதலர், கரைய, சூதர், நுவல, புரவி, சங்க, மதுரை, தும்பி, மருதம், மாகதர், வைகறை, திறக்கும், கேட்டது, பேசினர், பெண், பண்ணியம், அந்தணர், அணிமயில், பெருங்களிறு, நீங்கிய, மகளிர், கரைந்தன