ஐங்குறுநூறு - 26. குன்றக் குறவன் பத்து.
குன்றக் குறவன் ஆர்ப்பின் எழிலி நுன்பல் அழிதுளி பொழியும் நாட நெடுவரைப் படப்பை நும்மூர்க் கடுவரல் அருவி காணினும் அழுமே. | 251 |
குன்றக் குறவன் புல்வேய்க் குரம்பை மன்றாடு இளமழை மறைக்கும் நாடன் புரையோன் வாழி தோழி விரைபெயல் அரும்பனி அளைஇய கூதிர்ப் பெருந்தண் வாடையின் முந்துவந் தனனே. | 252 |
குன்றக் குறவன் சார்ந்த நறும்புகை தேஙகமழ் சிலம்பின் வரையகம் கமழும் கானக நாடன் வரையின் மன்றலும் உடையள்கொல் தோழி யாயே. | 253 |
குன்றக் குறவன் ஆரம் அறுத்தென நறும்புகை சூழ்ந்து காந்தள் நாறும் வண்ட்மிர் சுடர்நுதல் குறுமகள் கொண்டனர் செல்வர்தம் குன்றுகெழு நாட்டே. | 254 |
குன்றக் குறவன் காதல் மடமகள் வரையர மகளிர்ப் புரையுஞ் சாயலள் ஐயள் அரும்பிய முலையள் செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே. | 255 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 26. குன்றக் குறவன் பத்து., குன்றக், குறவன், இலக்கியங்கள், ஐங்குறுநூறு, பத்து, நறும்புகை, தோழி, எட்டுத்தொகை, சங்க, நாடன்