விநாயகர் அகவல் - அவ்வையார் நூல்கள்

பக்திக்கால இறுதியில் வெளியான நூல். இந்த நூலைத்தான் விநாயகரை வழிபடுபவர்கள் முதல் நூலாகக் கொள்வர். இது மிகுந்த பக்திச் சுவையுடைய நூல். ஆழ்ந்தபொருளுடையது. இதற்குப் பலர் பல விளக்கங்கள் எழுதியுள்ளனர்
நூல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பல்லிசை பாட பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்பப் . |
4 |
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும் . |
8 |
நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்னும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமும் புரிநூல் திகழ்ஒளி மார்பும் . |
12 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விநாயகர் அகவல் - அவ்வையார் நூல்கள், நூல்கள், மூன்று, நூல், விநாயகர், அவ்வையார், பெரிய, அகவல், இரண்டு, மார்பும், அழகிய, ஒளிவீசுகின்ற, | , வயிறும், சிலம்பு, இலக்கியங்கள், ஆடையும், பேழை, முகமும், வாயும்