கொன்றை வேந்தன் - அவ்வையார் நூல்கள்

பகர வருக்கம்
| 59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் |
ஒருவர் புண்ணியம் அவர் அடைந்த விளைச்சலில் தெரியும்
| 60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண் |
சிறந்த உணவாக இருந்தாலும், காலமறிந்து உண்ண வேண்டும்
| 61. பிறன்மனை புகாமை அறம் எனத்தகும் |
அடுத்தவன் மனைவியை விரும்பாததே சிறந்த அறம்
| 62. பீரம் பேணில் பாரம் தாங்கும் |
தாய்ப்பாலை ஊட்டி வளர்த்தால், அந்தக் குழந்தை பலம் பெறும், நிர்வாக சுமைகளைத் தாங்கும்
| 63. புலையும், கொலையும் களவும் தவிர் |
புலாலுண்ணுதல், கொலை, திருடு இம்மூன்றையும் செய்யாதே
| 64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம் |
கொடியவர்களிடம் சிறந்த ஒழுக்கங்கள் இருக்காது
| 65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும் |
ஞானம் பெற்றோர்க்கு சுற்றம் என்ற பந்தமும், கோபமும் கிடையாது
| 66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம் |
அறியாதவர் போன்று இருப்பது பெண்களுக்கு அணிகலன்
| 67. பையச் சென்றால் வையந் தாங்கும் |
நிதானமாகச் செய்யும் கார்யங்களில் வெற்றி நிச்சயம்
| 68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர் |
அனைத்துத் தீங்குகளையும் விட்டு விடு
| 69. போனகம் என்பது தானுழுது உண்ணல் |
தான் முயன்று உழைத்து சம்பாதித்ததே உணவு என்பதாகும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொன்றை வேந்தன் - அவ்வையார் நூல்கள், நூல்கள், கொன்றை, தாங்கும், சிறந்த, அவ்வையார், வேந்தன், பெற்றோர்க்கு, என்பது, | , இல்லை, தவிர், புண்ணியம், அறம், இலக்கியங்கள், தெரியும்