21. குருவழி - ஞானக் குறள்

| தன்பா லறியுந் தவமுடையார் நெஞ்சகத்துள் அன்பா யிருக்கு மரன். |
201 |
| சிந்தை சிவமாகக் காண்பவர் சிந்தையில் சிந்தித் திருக்குஞ் சிவம். |
202 |
| குருவி னடிபணிந்து கூடுவ தல்லார்க் கருவமாய் நிற்குஞ் சிவம். |
203 |
| தலைப்பட்ட சற்குருவின் சந்நிதியி லல்லால் வலைப்பட்ட மானதுவே யாம். |
204 |
| நெறிப்பட்ட சற்குரு நேர்வழி காட்டில் பிரிவற் றிருக்குஞ் சிவம். |
205 |
| நல்லன நூல்பல கற்பினுங் காண்பரிதே எல்லையில் லாத சிவம். |
206 |
| நினைப்பு மறப்பு மில்லாதவர் நெஞ்சந் தனைப்பிரி யாது சிவம். |
207 |
| ஒன்றிலொன் றில்லாத மனமுடை யாருடல் என்றுமொன் றாது சிவம். |
208 |
| நாட்டமில் லாவிடம் நாட்ட மறிந்தபின் மீட்டு விடாது சிவம். |
209 |
| பஞ்சமா சத்த மறுப்பவர்க் கல்லாஅல் அஞ்சலென் னாது சிவம். |
210 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
21. குருவழி - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - சிவம்