பாடல் 81 - புலிப்பாணி ஜோதிடம் 300
| ஆமப்பா யின்னமொரு சேதிகேளு |
இன்னொரு சேதியினையும் நன்கு உணர்ந்து கேட்பாயாக! இரண்டிற்குடையவனும் (இலக்கினத்திற்கு) குருவும், பத்தாவது கருமஸ்தானாதிபதியும் 11க்குடைய இலாபாபதியும் ஆகிய இவர்கள் நால்வரும் மாறிநிற்க தனம் மிகவும் குவியும். பூமியில் மிகுந்த பேரும் புகழும் பெறுவான். சிவிகை முதலியனவும் உடையவன். ஆனால் இச்சாதகனே பகைவருடன் சேர்ந்து குணம் மாறிக் கொடுவானேயானால் வீதியில் இழிவு தரத்தக்க பிச்சை உணவைப் பெற்று வாழவும் கூடும். இதனையும் எனது சற்குருவான போகமா முனிவருடைய கருணையாலே புலிப்பாணி ஆகிய நான் கூறலானேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 81 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், ஆகிய, பகைவருடன், astrology, தனம், குவியும்