பாடல் 131 - புலிப்பாணி ஜோதிடம் 300
| ஆரப்பா அயன்விதியை அரையக்கேளு |
கருத்தாக நான் கூறுகிறேன். நீ நன்கு உணர்ந்து கேட்பாயாக! பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான ஐந்துக்குடையவனுடன் ஆறுக்குடையவன் சேர அச்சென்மனுக்கு புத்திரதோஷம் ஏற்படும். சிவபரம் பொருளின் பேரருளால் இவர்கள் மூன்றாம் இடத்தில் நிற்கவும், அவர்களைத் தீயவர்கள் கண்ணுற்று நோக்கினாலும் அச்சென்மனுக்கு கொள்ளியிடப் பிள்ளையில்லை என்றே கூறுக. ஆனால் பரமகுருவான பிரகஸ்பதி அவர்களைக் கண்ணுற்று நோக்கினால் பலன் உண்டு என்றே கூறுவாயாக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 131 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், என்றே, கண்ணுற்று, astrology, அச்சென்மனுக்கு