குழந்தைப் பெயர் வழிகாட்டி - ஜோதிடப் பரிகாரங்கள்

பாரம்பரிய இந்திய குடும்பங்களில் குழந்தைகளுக்கு, குழந்தையின் ராசி அல்லது பிறந்த நட்சத்திரத்தின் படி பெயரிடப்படும் வழக்கம் இருந்து வருகிறது. அதாவது, குழந்தை பிறந்த போது சந்திரன் நின்ற நட்சத்திரத்திற்குறிய எழுத்தினை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டு பெயர் சூட்டப்படும் போது குழந்தையின் வாழ்வு மங்களகரமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
உதாரணத்திற்கு, கும்ப ராசி சதய நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தது எனில் அதற்கு உகந்த எழுத்துக்கள் கோ, ஸ, ஸீ, ஸூ ஆகும். எனவே பெயரை கோபால் அல்லது ஸாகர் என்பது போல வைக்க வேண்டும்.
உங்கள் ராசி மற்றும் நட்சத்திரம் தெரியவில்லை எனில் ஆன்லைனில் கணக்கிட இங்கே கிளிக் செய்யவும்.
| நட்சத்திரம் | தமிழ் எழுத்துக்கள் | English Letter |
| அசுபதி | சு, சே, சோ, ல | CHU,CHEY,CHO,LA |
| பரணி | லி, லு, லே, லோ | LI,LU,LEY,LO |
| கிருத்திகை | அ, இ, உ, எ | AO,Ee,UO,A |
| ரோகிணி | ஒ, வ, வி, வு | O,VA,VEE,VOO |
| மிருகசீரிஷம் | வே, வோ, கா, கி | VAY,VO,KAA,KE |
| திருவாதிரை | கு, க, ச, ஞ | KOO,GHAA,JNA,CHA |
| புனர்பூசம் | கே, கோ, ஹ, ஹி | KAY,KO,HAA,HEE |
| பூசம் | ஹூ, ஹே, ஹோ, ட | HOO,HAY,HO,DAA |
| ஆயில்பம் | டி, டு, டே, டோ | DEE,DOO,DAY,DO |
| மகம் | ம, மி, மு, மெ | MAA,MEE,MOO,MAY |
| பூரம் | மோ, ட, டி, டு | MO,TAA,TEE,TOO |
| உத்திரம் | டே, டோ, ப, பி | TAY,TO,PAA,PEE |
| அஸ்தம் | பூ, ஷ, ந, ட | PU,SHAA,NAA,THA |
| சித்திரை | பே, போ, ர, ரி | PAY,PO,RAA,REE |
| சுவாதி | ரு, ரே, ரோ, த | RU,RAY,RO,TAA |
| விசாகம் | தி, து, தே, தோ | THEE,THOO,TAHY,THO |
| அனுஷம் | ந, நி, நு, நே | NA,NEE,NOO,NAY |
| கேட்டை | நோ, ய, இ, பூ | NO,YAA,YEE,YOO |
| மூலம் | யே, யோ, ப, பி | YAY,YO,BAA,BEE |
| பூராடம் | பூ, த, ப, டா | BU,DHAA,BHA,DHA |
| உத்திராடம் | பே, போ, ஜ, ஜி | BAY,BO,JAA,JEE |
| திருவோணம் | ஜூ, ஜே, ஜோ, கா | JU,JAY,JO,GHA |
| அவிட்டம் | க, கீ, கு, கூ | GAA,GEE,GOO,GAY |
| சதயம் | கோ, ஸ, ஸீ, ஸூ | GO,SAA,SEE,SOO |
| பூரட்டாதி | ஸே, ஸோ, தா, தீ | SAY,SO,DAA,DEE |
| உத்திரட்டாதி | து, ச, ஸ்ரீ, ஞ | DHU,THA,SA,GHEE |
| ரேவதி | தே , தோ, ச, சி | DE,DO,CHAA,CHEE |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குழந்தைப் பெயர் வழிகாட்டி - Baby Name Guide - ஜோதிடப் பரிகாரங்கள் - Astrology Remedies - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்