ஜோதிடப் பாடம் – 4 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
ஒரு கிரகம் எந்த வீட்டில் உச்சம் பெறுகிறதோ அதற்கு 7-ம் வீட்டில் அவர் நீச்சம் பெ றுகிறார். உதாரணமாக சூரியன் மேஷத்தில் உச்சம் பெறுகிறார். மேஷத்தில் இருந்து 7-ம் வீடான (மேஷத்தையும் சேர்த்து எண்ண வேண்டும்), துலாத்தில் அவர் நீச்சம் பெறுகிறார்.
சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெறுகிறார். ரிஷபத்தில் கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோ கிணி 4- பாதங்கள், மிருகசீரிஷம் 1, 2, பாதங்கள் இருக்கின்றன. சந்திரன் ரோகிணியில் இருக்கும்போது மிகுந்த பலத்துடன் இருப்பதாகக் கூறப் படுகிறது. இதற்கு ஒரு சிறிய கதை உண்டு.
அஸ்வனி முதல் ரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்களும் தட்ச பிரஜாபதிக்கும் அக்னிக்கும் பிறந்த பெண்களாம். தட்சன் இந்தப் பெண்களையெல்லாம் சந்திரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான்.சந்திரன் இந்த 27 மனைவியரில் ரோகிணியிடம் மட்டுமே அதிக அன்பு செலுத்தி வந்தான். மற்ற 26 பேரையும் அவன் நினைக்கவே இல்லை. இதனால் விரக்தியுற்ற 26 பேரும் தந்தையிடம் சென்று முறையிட்டனர். தட்சன் மிக வருந்தி மருமகன் சந்திரனிடம் "எல்லோரிடமும் சமமாக அன்பாய் இருக்குமாறு" கூறினான். ஆனால் சந்திரனோ அவர் பேச்சைக் கேட்க்காமல் பழையபடி ரோகிணியிடம் மட்டும் அன்பு காட்டினான். இதனால் கோபமுற்ற தட்சன் சந்திரனின் கலைகள் நாளா வண்ணமும் குன்றட்டும் என சாபமிட்டார். சந்திரனின் ஒளி ஒவ்வொரு நாளும் குறையத் தொடங்கியது. இதனால் வருத்தமுற்ற சந்திரன் சிவபெறுமானை நோக்கித் தவம் புரிந்தான். தனக்கு மீண்டும் பழைய ஒளி கிடைக்க வேண்டும் என வேண்டிக்கொண்டான். சிவனும் மனமிறங்கி "குன்றத்தொடங்கிய ஒளி மீண்டும் சிறிது சிறிதாக வளர" வரம் கொடுத்தார். அதனால் தான் சந்திரன் 15 நாட்கள் தேய்ந்து பின் 15 நாட்களில் வளர்கிறார். இது தான் தேய் பிறை, வளர் பிறை தோன்றிய புராணக்கதை. சரி! நாம் இனி விஞ்ஞானத்திற்கு வருவோம்.
சந்திரன் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு பூமியையும் சுற்றுகிறது என்று எல்லோருக்கும் தெரியும். பௌர்ணமியன்று சூரியனின் ஒளி சந்திரன் மேல் பட்டு பிரகாசமாய்க் காட்சி அளிக்கிறார். முழு நிலவாய்க் காட்சி அளிக்கிறார். சந்திரன் தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக் கொள்ள 27 பூமியின் நாட்கள் ஆகின்றன. அதாவது சந்திரன் ஒரு முறை சுற்றிக் கொள்வதற்குள் பூமி 27 முறை சுற்றி விடுகிறது. சந்திரன் மெதுவாகச் சுற்றுவதால் தினமும் சிறிதுசிறிதாய்க் குறைகிறார். நமது கண்களுக்கு சிறிது, சிறிதாகக் குறைந்து காணப் படுகிறார். இதுதான் பிறைகள் தோன்றக் காரணம். அம்மாவாசையன்று சந்திரன் பாதிச் சுற்றுத்தான் சுற்றி இருப்பார். அப்போது அவர் கண்ணுக்குத் தெரிவது இல்லை. மீதிச் சுற்றைச் சுற்ற ஆரம்பிக்கும் போது சிறிது, சிறிதாக வளர ஆரம்பிக்கிறார். அதைத் தான் நாம் வளர் பிறை என்கிறோம். ஒரு சுற்று முடிந்தவுடன் அவர் முழுநிலவாய்க் காட்சி அளிக்கிறார். அதைத்தான் நாம் பௌர்ணமி என்கிறோம். நாம் எப்போதும் நிலவின் ஒரு பக்கத்தையே பார்க்கிறோம். மறு பக்கத்தைப் பார்க்கவே முடியாதா? முடியும்.
அம்மாவாசையன்று அது மறு பக்கத்தைக் காட்டுகிறது. நமக்குத்தான் அது இருட்டாக இருப்பதால் மறுபக்கம் தெரிவதில்லை. நாம் எப்போதும் ஒரு பக்கத்தையே பார்க்கிறோம். சரி! இனிமேல் நாம் பாடத்திற்கு வருவோம்.
பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.முதலில் ஆச்சாரியாள் மடத்துப்பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஆடி மாதம் 1-ம் தேதிக்குப் பஞ்சாங்கம் எப்படிப் பார்ப்பது எனக் கற்றுக் கொடுத்தோம். ஆடி 30-ம் தேதிக்கு எப்படி ஜாதகம் கணிப்பது எனப் பார்ப்போம். பஞ்சாங்கத்தில் ஆடி மாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலே ஜாதகக்கட்டம் போட்டிருக்கிறார்கள். பாருங்கள். அது ஆடி 1-ம் தேதியின் கிரகநிலை. அன்று ஒரு குழந்தை பிறந்தால் அது தான் அன்றைய கிரக நிலை. அதாவது கீழே காட்டியுள்ள படி அன்றைய கிரக நிலை இருக்கிறது.
ரிஷபத்தில் | சனி, சுக்கிரன் |
மிதுனத்தில் | ராகு, குரு, புதன் |
கடகத்தில் | சூரியன் |
விருச்சிகத்தில் | செவ்வாய் |
தனுசில் | கேது |
ஆனால் நாம் எடுத்துக் கொண்டது ஆடி-30-ம் தேதி. இந்த 30-நாட்களில் கிரகங்கள் இடம் பெயர்ந்து இருக்கும் அல்லவா? நாம் அதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? கட்டத்தின் நடுவில் 'பெயர்ச்சி' எனப் போட்டு இருக்கிறார்கள் பாருங்கள்.
12 - மிதுனம் சுக்கிரன்
13 - கடகம் புதன்
28 - சிம்மம் புதன்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 4 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, சந்திரன், நாம், அவர், ஜோதிடப், எடுத்துக், தான், நீங்களும், சுற்றிக், ஜோதிடம், ஜோதிடர், சிறிது, காட்சி, அளிக்கிறார், புதன், கொள்ளுங்கள், பாடம், முறை, இதனால், பிறை, ரிஷபத்தில், உச்சம், ஆகலாம், பாதங்கள், பெறுகிறார், தட்சன், பக்கத்தையே, சுற்றி, அம்மாவாசையன்று, எப்போதும், பார்க்கிறோம், அதைத், என்கிறோம், எனப், நிலை, சுக்கிரன், வீட்டில், கிரக, அன்றைய, அதாவது, பாருங்கள், பாடங்கள், சூரியன், மீண்டும், சிறிதாக, நாட்கள், சந்திரனின், ", அன்பு, இல்லை, நாட்களில், வளர், ரோகிணியிடம், நீச்சம், மேஷத்தில், தன்னைத்தானே, வேண்டும், வருவோம், கொள்ள