ஜோதிடப் பாடம் – 41 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
இதுவரையில் 40 பாடங்களைப் படித்து முடித்து விட்டீர்கள். ஜோதிடத்தைப் பற்றி ஓரளவிற்குப் புரிந்து கொண்டிருப்பீர்கள். இப்போது பலன் எப்படிச் சொல்வது என்று பார்ப்போம். பொதுவாகப் பல ஜோதிடர்கள் கிரகங்களின் ஆதிபத்தியத்தை மட்டுமே வைத்துக் கொண்டு பலன் சொல்லுவர்.
உதாரணமாக ஒருவருக்குக் கன்னியா இலக்கினம் எனக் கொள்ளுங்கள். அவருக்கு செவ்வாய் தசை நடக்கிறது எனக்கொள்ளுங்கள். உடனே கன்னியா இலக்கினத்திற்கு செவ்வாயானவர் 3, 8 -ம் வீடுகளுக்கு அதிபதி. ஆகவே அவர் நல்லதையே செய்ய மாட்டார் எனக் கூறுவார்கள். செவ்வாய் எங்கு இருக்கிறார் எனவும், எந்த நட்சத்திரச் சாரத்திலிருக்கிறார் எனவும் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆதிபத்தியத்தை வைத்தே பலனைக் கூறுவார்கள். சிலர் வெறும் கோச்சாரத்தை மட்டும் வைத்தே பலனைக் கூறுவார்கள். தற்போது உங்களுக்கு ஏழரை நாட்டுச் சனி, அஷ்டமத்துச் சனி, என்று பல நிகழ்வுகளுக்கும்அவற்றைக் கையைக் காட்டுவார்கள். தற்போது மிதுன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டுச் சனி நடைபெற்று வருகிறது. என்ன பிரச்சனை அவர்களுக்கு வந்தாலும் கோட்ச்சாரத்தையே காரணம் காட்டுவார்கள். அதே மிதுன ராசியில் பிறந்த மற்றொருவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாது இருக்கும். அவருக்கு ஏன் அந்தப் பிரச்னை வரவில்லை எனப் பார்க்க மாட்டார்கள். இவ்வாறு பலரும் பலவிதமாகப் பலன் கூறி வருகின்றார்கள். நாம் நமது வாசகர் களுக்கு ஓர் எளிய வழி முறையக் கற்றுக் கொடுப்போம். உதாரணத்திற்கு ஓர் ஜாதகத்தைப் பார்ப்போம். இதுவும் கன்னியா இலக்கின ஜாதகம்தான். இவருக்கு செவ்வாய் தசை எப்படி இருந்தது எனப் பார்க்கப் போகிறோம். கன்னியா இலக்கினத்திற்கு 3, 8-ம் வீட்டிற்கு உடையவரல்லவா? செவ்வாய் கஷ்டத்தையல்லவா கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை. பல நம்மைகளைச் செய்து விட்டார். கஷ்டங்கள் எதுவும் செய்ய வில்லை.
ராசி
இலக்கினம் : கன்னி
4ம் வீட்டில் : சந்திரன், புதன், சுக்கிரன்
5ம் வீட்டில் : சூரியன், கேது
9ம் வீட்டில் : செவ்வாய், சனி (வ)
11ம் வீட்டில் : ராகு
12ம் வீட்டில் : குரு (வ)
நவாம்சம்
இலக்கினம் : மீனம்
இலக்கினத்தில் சூரியன்
2ம் வீட்டில் : சுக்கிரன், செவ்வாய், குரு
3ம் வீட்டில் : கேது
5ம் வீட்டில் : சந்திரன்
6ம் வீட்டில் : புதன்
7ம் வீட்டில் : சனி
9ம் வீட்டில் : ராகு
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 41 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, வீட்டில், செவ்வாய், ஜோதிடப், கன்னியா, இலக்கினம், பலன், கூறுவார்கள், நீங்களும், பாடம், ஜோதிடம், ஆகலாம், ஜோதிடர், எனப், மிதுன, குரு, காட்டுவார்கள், ராகு, கேது, சுக்கிரன், நாட்டுச், புதன், சந்திரன், சூரியன், பலனைக், எனக், அவருக்கு, பாடங்கள், ஆதிபத்தியத்தை, பார்ப்போம், இலக்கினத்திற்கு, செய்ய, தற்போது, வைத்தே, மாட்டார்கள், எனவும், ஏழரை