ஜோதிடப் பாடம் – 32 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
ஒருவர் எந்த மாதிரியான தொழில் செய்ய முடியும் என்பதைப் போன பாடத்தில் பார்த்தீர்கள். பலவகைப் பட்ட கிரகங்களின் சேர்க்கையால் எந்தத் தொழில் செய்ய முடியும் என்பதையும் விளக்கி இருந்தோம். ஒருவருக்கு எப்பொழுது பதவி உயர்வு கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம். பதவி உயர்வு கிடைக்க நாம் 2, 6, 10 மற்றும் 11-ம் வீடுகளை ஆராய வேண்டும். இந்த வீட்டைக் குறிக்கும் கிரகங்களால்தான் பதவி உயர்வைக் கொடுக்க முடியும். ஏன்? இரண்டாம் வீடென்பது பண வரவைக் குறிக்கிறது. பதவி உயர்வென்றால் பண வரவும் இருக்க வேண்டுமல்லவா? பணவரவைக் குறிப்பது 2-ம் வீடல்லவா? ஆக இரண்டாம் வீட்டைக் குறிக்கின்ற கிரகங்களின் தசாபுக்திக் காலத்தில் ஒருவருக்குப் பதவி கிடைக்கும். 6-ம் வீடென்பது நாம் செய்யும் தொழிலைக் குறிக்கிறது. நாம்செய்யும் தொழிலிலிருந்துதானே நாம் பதவி உயர்வை எதிர்பார்க்கிறோம். ஆக நாம் 6-ம் வீட்டையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.10-ம் வீடென்பது ஜீவனஸ்தானம். ஜீவனமென்பது தொழிலாக இருக்கலாம். அல்லது உத்தியோகமாக இருக்கலாம். அதில் உயர்வு பெற வேண்டுமென்றால் அந்த வீட்டைக் குறிக்கின்ற கிரகங்களின் தசா, புக்திக் காலங்களில் தானே முடியும். ஆக 10-ம் வீட்டையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். 11-ம் வீடென்பது லாப ஸ்தானம். அதாவது நம் ஆசைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்ற வீடாகும். ஆக 11-ம் வீட்டையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நான்கு வீடுகளைக் குறிக்கும் தசாபுக்தி காலங்களில்தான் ஒருவர் பதவி உயர்வு பெற முடியும்.
6-ம் வீடென்பது, ரண, ரோகம், வியாதி, கடன் ஆகியவற்றைத்தான் குறிக்குமென்று என்று சிலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். அது தவறு. 6-ம் வீடு ஒருவருக்கு வெற்றியையும் கொடுக்கும் வீடாகும். 7-வது வீடு நம்முடன் போட்டி போடுபவரைக் குறிக்கிறது. அவருக்கு தோல்வியைக் கொடுப்பது 12-ம் வீடல்லவா?
7-க்குப் 12-ம் வீடு எது? 6-ம் வீடல்லவா? ஆக ஒருவர் 6-ம் வீடு குறிக்கின்ற தசாபுக்திக் காலங்களில் எடுத்த முயற்சியில் வெற்றி பெற முடியும். உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்.
மிதுன இலக்கினம்.
கடகத்தில் சூரியன், சுக்கிரன்; சிம்மத்தில் புதன்;
துலாத்தில் ராகு;
தனுசில் சந்திரன்;
மகரத்தில் செவ்வாய்;
மீனத்தில் குரு;
மேஷத்தில் சனி, கேது;
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 32 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, பதவி, முடியும், நாம், ஜோதிடப், வீடென்பது, உயர்வு, வீடு, வேண்டும், ஜோதிடர், குறிக்கிறது, குறிக்கின்ற, கொள்ள, எடுத்துக், கணக்கில், வீட்டையும், வீடல்லவா, வீட்டைக், கிரகங்களின், நீங்களும், ஒருவர், ஜோதிடம், பாடம், ஆகலாம், பாடங்கள், காலங்களில், வீடாகும், இருக்கலாம், தசாபுக்திக், இரண்டாம், குறிக்கும், ஒருவருக்கு, செய்ய, கிடைக்கும், தொழில்