ஜோதிடப் பாடம் – 31 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
நம்மிடம் பலர் தொழில் சம்மந்தமான கேள்விகளைக் கேட்ப்பதுண்டு. அத்தகைய கேள்விகளை உங்கள் முன் வைத்துவிட்டு அதற்கு பதிலும் அளிக்கப் போகின்றோம்.
கேள்வி : ஒருவர் துணி வியாபாரம் செய்ய எத்தகைய கிரக நிலைகள் இருக்க வேண்டும்?
பதில் : சுக்கிரன் துணிகளுக்குக் காரகன். புதன் வியாபரத்திற்கு அதிபதி. ஆக புதனும், சுக்கிரனும் 10-ம் வீட்டுடன் சம்மந்தப்பட்டவர்களுக்கு துணி வியாபாரம் அமையும்.
கேள்வி : கட்டிடம் Contract எடுத்துத் தொழில் செய்ய எத்தகைய கிரக நிலைகள் இருக்க வேண்டும்?
பதில் : கட்டிடங்களுக்கு அதிபதி செவ்வாய். புதன் Contract அல்லது Agency-க்கு அதிபதி. ஆக செவ்வய்-புதன் சேர்க்கை இந்தத் தொழிலுக்குத் தேவை.
கேள்வி :தையல் தொழில் செய்யத் தேவையான கிரகங்கள் என்ன?
பதில் : இதில் மூன்று வித கிரக் சேர்க்கை இருக்க வேண்டும். துணிகளுக்கு சுக்கிரன் காரகம் வகிக்கிறார். செவ்வாயானவர் மிஷின் சம்மந்தப் பட்ட தொழிலைக் குறிக்கிறார். சனி உடல் வருத்திச் செய்யும் தொழிலைக் குறிப்பார். ஆகவே சுக்கிரன், செவ்வய், சனி சம்மந்தப் பட்டவர்கள் தையல் சம்மந்தமான தொழிலில் இருப்பார்கள்.
கேள்வி :சுறுக்கெழுத்தாளராக என்ன சேர்க்கை இருக்க வேண்டும்?
பதில் : புதன் புத்தகங்களையும், Clerical work - களையும் குறிக்கிறது. செவ்வாய் மெஷினரிகளைக் குறிக்கிறது. சனி எதையும் சுறுக்கமாகத் தெரிவிப்பதைக் காட்டுகிறது. Short-hand என்பதே எதையும் சுறுக்கமாகத் தெரிவிப்பது அல்லவா? ஆக புதன், செவ்வய், சனி சம்மந்தப்பட்டால் ஒருவர் சுறுக்கெழுத்தாளராக முடியும்.
கேள்வி : போலீஸ் அல்லது ராணுவத்திற்கு ஏந்த கிரக சேர்க்கை இருக்க வேண்டும்?
பதில் : செவ்வாய். அவர்தான் ஒருவருக்கு தைரியத்தைக் கொடுப்பவர். ஒருவரின் ஜீவனஸ்தானத்துடன் செவ்வாய் சம்மந்தப் பட்டால்தான் ஒருவர் போலீஸ் ஆக முடியும். செவ்வாயுடன் சுக்கிரனும் சம்மந்தப் பட்டால் ஒருவர் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்தவராக இருப்பார். ஏனெனில் சுக்கிரன் வாகனங்களுக்குக் காரகம் வகிப்பவர். குரு சம்மந்தப் பட்டால் சட்டம், ஒழுங்கைப் பராமரிப்பவராக இருப்பார். குரு சட்டம், ஒழுங்குகளுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா!
கேள்வி : விவசாயக் கருவிகளை விற்பனை செய்ய என்ன கிரகச் சேர்க்கை இருக்க வேண்டும்?
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 31 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, கேள்வி, வேண்டும், இருக்க, பதில், புதன், ஜோதிடப், சேர்க்கை, சம்மந்தப், செவ்வாய், சுக்கிரன், ஒருவர், கிரக, காரகம், என்ன, செவ்வய், அதிபதி, ஜோதிடம், ஆகலாம், நீங்களும், பாடம், தொழில், ஜோதிடர், செய்ய, அல்லவா, முடியும், சுறுக்கமாகத், எதையும், போலீஸ், பட்டால், சட்டம், குரு, வகிப்பவர், இருப்பார், குறிக்கிறது, தொழிலைக், அல்லது, துணி, contract, சுக்கிரனும், பாடங்கள், வியாபாரம், சம்மந்தமான, எத்தகைய, நிலைகள், தையல், சுறுக்கெழுத்தாளராக